உக்ரைன் போரில் எதிர்பார்த்த விரைவான வெற்றி கிடைக்காததால் புதின் ஏமாற்றம்?

உக்ரைன் போரில் எதிர்பார்த்த விரைவான வெற்றி கிடைக்காததால் புதின் ஏமாற்றம்?
உக்ரைன் போரில் எதிர்பார்த்த விரைவான வெற்றி கிடைக்காததால் புதின் ஏமாற்றம்?

இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர், ஐரோப்பாவில் மூண்டுள்ள மிகப்பெரிய போராக கருதப்படும் உக்ரைன் போரில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் - ரஷ்யா போர் இரண்டு வாரங்களாக நீடித்து வருகிறது. இந்தப் போரில் இதுவரை 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை ரஷ்ய துருப்புகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த இழப்பை ரஷ்ய அதிபர் புதின் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக, உக்ரைனில் போர் செய்து வரும் ரஷ்யாவின் வான் மற்றும் தரைப்படைகளுக்கு இடையே முறையான ஒருங்கிணைப்பு இல்லாததால் ரஷ்யாவால் முழுமையான ஆதிக்கம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

போரில், தான் எதிர்பார்த்த வெற்றி கிட்டாததால், விளாடிமிர் புதின் விரக்தி அடைந்துள்ளதாகவும், இதனால் தாக்குதல் தீவிரப்படுத்தப்படலாம் என்றும் அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, அடுத்த சில வாரங்களுக்கு மிக மோசமான நிகழ்வுகளை உக்ரைன் காண நேரிடும் என்ற அச்சமும் நிலவுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com