தொடங்கியது சர்வதேச நீதிமன்ற விசாரணை ; ரஷ்ய - உக்ரைன் வழக்கறிஞர்களிடையே கடும் வாக்குவாதம்

தொடங்கியது சர்வதேச நீதிமன்ற விசாரணை ; ரஷ்ய - உக்ரைன் வழக்கறிஞர்களிடையே கடும் வாக்குவாதம்
தொடங்கியது சர்வதேச நீதிமன்ற விசாரணை ; ரஷ்ய - உக்ரைன் வழக்கறிஞர்களிடையே கடும் வாக்குவாதம்

தங்கள் நாட்டில் இருந்து ரஷ்ய படைகளை வெளியேற்றக் கோரி உக்ரைன் தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக ஐ.நா. சர்வதேச நீதிமன்றம் தனது விசாரணையை இன்று தொடங்கியது.

உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள சில பிராந்தியங்களில் ரஷ்ய மொழி பேசும் சிறுபான்மையினர்கள் மீது அந்நாட்டு அரசு அடக்குமுறைகளையும், படுகொலைகளையும் நிகழ்த்தி வருவதாக கூறி உக்ரைன் மீது ரஷ்யா கடந்த மாதம் 24-ம் தேதி போர் தொடுத்தது. உக்ரைனை சுற்றிவளைத்து ரஷ்ய ராணுவம் நடத்தி வரும் தாக்குதல் 12-வது நாளாக நீடித்து வருகிறது.

இந்த தாக்குதலில் உக்ரைனின் பல முக்கிய நகரங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் தலைநகர் கீவ் எந்த நேரத்திலும் ரஷ்ய படைகளிடம் வீழ்ந்து விடும் என்ற சூழல் நிலவுகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகளையும் மீறி, உக்ரைன் மீது ரஷ்யா இந்தப் போரை நடத்தி வருகிறது.

இந்நிலையில், தங்கள் நாட்டில் இருந்து ரஷ்ய படைகளை உடனடியாக வெளியேற உத்தரவிடக் கோரியும், போர் நிறுத்தத்தை அறிவிக்கக் கோரியும் நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் கடந்த வாரம் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை, சர்வதேச நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் தொடங்கியது.

இந்த விசாரணையின் போது, உக்ரைன் - ரஷ்யா சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. உக்ரைனின் வாதங்கள் நீதிமன்றத்தில் இன்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ரஷ்யா தனது தரப்பு வாதங்களை நாளை முன்வைக்க சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com