ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைன் நடிகை பலி: யார் அவர்?

ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைன் நடிகை பலி: யார் அவர்?
ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைன் நடிகை பலி: யார் அவர்?

ரஷ்ய ராக்கெட் தாக்குதலில் உக்ரைன் நடிகை ஒக்ஸானா ஷ்வெட்ஸ் கொல்லப்பட்டார்.

உக்ரைனின் கிவ் குடியிருப்பு பகுதியில் ரஷ்யா நடத்திய ராக்கெட் தாக்குதலில் அந்நாட்டு நடிகை ஒக்ஸானா ஷ்வெட்ஸ் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''கிவ் குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் திறமையான திரைக்கலைஞர் உயிரிழந்துள்ளார்''என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான, 'Honored Artist of Ukraine' என்ற விருது நடிகை ஒக்ஸானாவுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 வாரங்களைக்கடந்து நடைபெற்று வரும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலில் , கிட்டத்தட்ட 600 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com