போர்க்கைதியின் நிலை!! வைரலாகும் ரஷ்யாவிடமிருந்து தப்பித்து வந்த உக்ரைன் வீரரின் போட்டோ!
ரஷ்யா- உக்ரைனுக்கு இடையிலான போர் ஏழு மாத காலமாக நீடித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, உக்ரைன் போர் வீரர்களை ரஷ்யா சிறைபிடித்துக் கொண்டு சென்று சித்திரவதை செய்து வருகிறது என்றும் போர்க் குற்றச் செயல்களை ரஷ்யா தொடர்ந்து செய்து வருகிறது என்றும் உக்ரைன் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது.
இந்நிலையில், ரஷ்யாவின் சிறையில் பிடியிலிருந்து தப்பிய வந்த உக்ரைன் போர் வீரர் ஒருவரின் புகைப்படத்தை உக்ரைன் தற்போது வெளியிட்டுள்ளது.
உக்ரைன் வீரர்கள் ரஷ்ய ராணுவத்துக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்தி இழந்த பகுதிகளை மீட்டு வருகின்றனர். இந்த போரில் உக்ரைன் போர் வீரரான மைக்கைலோ டியானோவை ரஷ்யா சிறைபிடித்தது. சிறையில் பல கொடூரமான சித்திரவதைகள் செய்ததால், அந்த வீரர் எலும்பும் தோலுமாகத் உயிர் பிழித்து தப்பித்து வந்திருக்கிறார்.
உக்ரைனின் பல போர் வீரர்கள் இன்னும் ரஷ்யாவின் சிறையில் போர் கைதிகளாக இருக்கிறார்கள். மைக்கைலோ டியானோவ் மற்றும் அதிர்ஷ்டவசமாக தப்பித்து வந்துள்ளார்.
தப்பித்து வந்த போர் வீரர் முன்பு எப்படி இருந்தார், இப்போது எப்படி உள்ளார் என்ற புகைப்படங்களை இணைத்து வெளியிட்ட உக்ரைன், ‘’ ரஷ்யா இன்னும் தனது நாசிசத்தின் பாரம்பரியத்தைக் கைவிடவில்லை. ஜெனிவா உடன்படிக்கையை இப்படி தான் ரஷ்யா பின்பற்றுகிறது’’ என ரஷ்யாவுக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது உக்ரைன்.