”குளிர் அதிகமா இருக்கு; எல்லோரையும் சீக்கிரமா மீட்டு வாருங்க” - தமிழகம் திரும்பிய மாணவி

”குளிர் அதிகமா இருக்கு; எல்லோரையும் சீக்கிரமா மீட்டு வாருங்க” - தமிழகம் திரும்பிய மாணவி

”குளிர் அதிகமா இருக்கு; எல்லோரையும் சீக்கிரமா மீட்டு வாருங்க” - தமிழகம் திரும்பிய மாணவி
Published on

உக்ரைனில் குளிர் அதிகமாக உள்ளது எனவும், மாணவர்களை விரைந்து மீட்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தமிழகம் திரும்பிய மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உக்ரைனிலிருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்கள் சென்னை வந்தடைந்தனர். செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், உக்ரைனில் குளிர் அதிகமாக உள்ளதாகவும், அங்கு சிக்கித்தவிக்கும் மாணவர்கள் உணவுக்கே கஷ்டப்படுவதாகவும் தெரிவித்தனர். எனவே அரசு முயற்சிகளை எடுத்து சீக்கிரத்தில் அவர்களை மீட்டுக்கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும் அங்கு போர் பதட்டம் அதிகமாக இருக்கிறது எனவும், படிப்பு முடியும் தருவாயில் உள்ள மாணவர்கள் டிகிரி பெறுவதற்கும் அரசு வழிவகை செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com