ரஷ்யா - உக்ரைன்
"நான் கூறியதாக வெளியான தகவல்கள் வதந்தி" - சூளுரைத்த உக்ரைன் அதிபர்
"நான் கூறியதாக வெளியான தகவல்கள் வதந்தி" - சூளுரைத்த உக்ரைன் அதிபர்
ராணுவத்தை சரணடைய நான் கூறியதாக வெளியான தகவல் வதந்தி; அவ்வாறு நான் கூறவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
உக்ரைன் - ரஷ்யப் போர் வலுத்துவரும் நிலையில், ரஷ்யப்படைகள் உக்ரைனுக்கும் ஊடுருவி சென்றுகொண்டிருக்கின்றன. இந்நிலையில் உக்ரைன் ராணுவத்தை ரஷ்யாவிடம் அதிபர் ஜெலன்ஸ்கி சரணையடையக் கூறியதாக தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில், அந்த தகவல் வதந்தி என ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், நான் ராணுவத்தை சரணடைய சொல்லிவிட்டதாக வந்ததிகள் கிளப்பப்பட்டு வருகின்றன. அவ்வாறு நான் கூறவில்லை. நாட்டை விட்டுக்கொடுக்க போவதில்லை; ரஷ்யா தாக்குதலை நிறுத்தாதவரை நாங்கள் எங்கள் ஆயுதங்களையும் கீழே போடமாட்டோம். இது எங்கள் நாடு, எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக போராடுகிறோம்’’ என உறுதிப்பட தெரிவித்துள்ளார் ஜெலன்ஸ்கி.