”உக்ரைன் ராணுவம் இந்தியர்களை ரயில்களில் ஏற்ற மறுக்கிறது” - புதிய வீடியோவால் பரபரப்பு

”உக்ரைன் ராணுவம் இந்தியர்களை ரயில்களில் ஏற்ற மறுக்கிறது” - புதிய வீடியோவால் பரபரப்பு
”உக்ரைன் ராணுவம் இந்தியர்களை ரயில்களில் ஏற்ற மறுக்கிறது” - புதிய வீடியோவால் பரபரப்பு

உக்ரைனிலிருந்து வெளியேறுவதற்காக ரயில்களில் ஏற இந்திய மாணவர்களுக்கு அனுமதி மறுப்படுவதை நிரூபிக்கும் வகையில் புதிய வீடியோ வெளியாகியுள்ளது.

உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ளதால் அந்நாட்டை விட்டு இந்தியர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் வெளியேறி வருகின்றனர். இந்த சூழலில், எல்லையோர நகரங்களுக்கு செல்ல ரயில்களை பயன்படுத்த விடாமல் இந்திய மாணவர்களை உக்ரைன் போலீஸாரும், ராணுவத்தினரும் தடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் குறித்து இந்தியத் தூதரகம் கவலை தெரிவித்தை அடுத்து, உக்ரைனில் இன, நிறப் பாகுபாடு காட்டப்படுவதில்லை என அந்நாட்டு அரசு சில மணிநேரங்களுக்கு முன்பு விளக்கமளித்திருந்தது.

இந்நிலையில், இந்த விளக்கம் வெளியான சில நிமிடங்களுக்காகவே, இந்திய மாணவர்களை ரயிலில் ஏற அனுமதிக்க மறுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், கார்கிவிலிருந்து வெளியேற ரயில் நிலையங்களுக்கு சென்ற இந்திய மாணவர்களை ரயில்களில் ஏற்றாமல் அங்குள்ள போலீஸார் வெளியேற்றுவதை காண முடிகிறது. அதேபோல, ரயிலில் தங்களையும் ஏற்றி கொள்ளுமாறு இந்திய மாணவர்கள் உக்ரைன் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கும் காட்சியையும் பார்க்க முடிகிறது.

இதுகுறித்து அந்த ரயில் நிலையத்தில் இருந்து இந்திய மாணவர் தியேஷ் உதயன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், "கார்கிவ் நகரில் இருந்து வெளியேறுமாறு இந்திய தூதரகம் எங்களை அறிவுறுத்தியது. இதன்பேரில், உக்ரைன் எல்லைகளுக்கு செல்ல கார்கிவ் ரயில் நிலையத்திற்கு வந்தோம். ஆனால், ரயிலில் ஏற போலீஸாரும், ராணுவத்தினருக்கும் எங்களை அனுமதிக்கவில்லை.

அதை மீறி ரயிலில் ஏற முயன்றவர்களை, அவர்கள் கடுமையாக தாக்குகிறார்கள். ரயில் நிலையத்தில் 4 முதல் 5 மணிநேரம் வரை காத்திருக்கிறோம். உணவும், குடிநீரும் இல்லை. ஆங்காங்கே குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொண்டும் எந்த பயனும் இல்லை" என அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com