"போரை நிறுத்தி மக்களை காப்பாற்றுங்கள்" - செலன்ஸ்கிக்கு முன்னாள் உக்ரைன் அதிபர் வேண்டுகோள்

"போரை நிறுத்தி மக்களை காப்பாற்றுங்கள்" - செலன்ஸ்கிக்கு முன்னாள் உக்ரைன் அதிபர் வேண்டுகோள்
"போரை நிறுத்தி மக்களை காப்பாற்றுங்கள்" - செலன்ஸ்கிக்கு முன்னாள் உக்ரைன் அதிபர் வேண்டுகோள்

"ரஷ்யாவுடனான போரை நிறுத்தி மக்களை காப்பாற்றுங்கள்" என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கிக்கு முன்னாள் அதிபர் விக்டர் யானுகோவிச் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவில் தாக்குதல் இரண்டு வாரங்களாக நீடித்து வருகிறது. இதில் உக்ரைனைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், 15 லட்சத்குக்கும் மேற்பட்டோர் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்திருப்பதாகவும் ஐ.நா.தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா - உக்ரைன் இடையே இதுவரை நடைபெற்ற மூன்றுகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன.

இந்நிலையில், உக்ரைன் போர் தொடர்பாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் விக்டர் யானுகோவிச், தற்போதைய அதிபர் செலன்ஸ்கிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "உக்ரைனில் ஆட்சிப் பொறுப்பேற்றது முதலாக போரில் இருந்து நாட்டை காப்பாற்றுவேன் என்ற வாக்குறுதியை தான் நீங்கள் கூறி வந்திருக்கிறீர்கள். அதனால்தான், மக்களும் உங்களுக்கு ஆதரவாக இருந்தார்கள். ஆனால், இப்போது உங்களை கதாநாயகனாக காட்டுவதற்காக ரஷ்யாவுடன் போர் புரிந்து வருகிறீர்கள். அத்துடன், நாட்டு மக்கள் கைகளிலும் துப்பாக்கியை கொடுத்து அவர்களையும் பலி கொடுத்து வருகிறீர்கள்.

உங்களின் சுயகவுரவத்துக்காக மட்டுமே தற்போது ரஷ்யாவுக்கு எதிரான போரை முன்னின்று நடத்துகிறீர்கள். உக்ரைனையும், உக்ரைன் மக்கள் நலனையும் நீங்கள் மறந்து விட்டீர்கள். கதாநாயகன் என்பவர் சொந்த நாட்டு மக்களை பலி கொடுக்க மாட்டார். மாறாக, அவர்களை அரண் போல நின்று காப்பாற்றுபவரே உண்மையான கதாநாயகன். எனவே, ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி போரை உடனடியாக நிறுத்துங்கள். லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றுங்கள்" என அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com