"ரோஷமான மதுப்பிரியர்கள்" ரஷ்ய வோட்காவை சாக்கடையில் ஊற்றிய அமெரிக்கர்கள்

"ரோஷமான மதுப்பிரியர்கள்" ரஷ்ய வோட்காவை சாக்கடையில் ஊற்றிய அமெரிக்கர்கள்

"ரோஷமான மதுப்பிரியர்கள்" ரஷ்ய வோட்காவை சாக்கடையில் ஊற்றிய அமெரிக்கர்கள்
Published on

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்த நாட்டின் வோட்காவை சாக்கடையில் ஊற்றுவதற்கு அமெரிக்காவில் உள்ள மதுப்பிரியர்கள் பணம் செலுத்துகிறார்கள்.

இதனால் அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் ரஷ்ய வோட்காவின் விற்பனை அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் திரட்டப்பட்ட பணம் உக்ரைன் நாட்டில் மனிதாபிமான உதவிகளுக்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது.ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யவும், உக்ரைனின் போர் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவும் ஒரு நூதன முயற்சியாக ரஷ்ய வோட்காவை அவர்கள் சாக்கடையில் ஊற்றுகிறார்கள்.

லாஸ் வேகாஸில் உள்ள ஒரு பார், ரஷ்ய வோட்காவை சாக்கடையில் ஊற்றுவதற்கு பணம் செலுத்தும் முயற்சியைத் தொடங்கியுள்ளது. ரஷ்ய வோட்கா பாட்டில்களை கழிப்பறையில் ஊற்றுவதற்காக வாடிக்கையாளர்கள் 300 அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்குவதாக கூறப்படுகிறது. இந்த முயற்சியின் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com