"நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை" உக்ரைனில் சிக்கியுள்ள தென்காசி மாணவர்கள்

"நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை" உக்ரைனில் சிக்கியுள்ள தென்காசி மாணவர்கள்

"நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை" உக்ரைனில் சிக்கியுள்ள தென்காசி மாணவர்கள்
Published on

போர் நடந்துவரும் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தங்கள் பிள்ளைகளை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த ஹமீது பாதுஷா என்பவரின் மகன் சாகுல் அமீது, சேக்உதூமான் என்பவரின் மகன் அனஸ், செரீப் என்பவரின் மகன் ஆசாத் மற்றும் புளியங்குடியைச் சேர்ந்த கோதரி என்பவரின் மகன் அப்துல்லா ஆகியோர் கார்கிவ் நகரில் மருத்துவம் பயின்று வருகின்றனர். அங்கு ரஷ்யா தொடர்ச்சியாக வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதாகவும், சுரங்க அறைகளில் பதுங்கியிருப்பதாகவும் அவர்கள் செல்போன் வீடியோ மூலம் தங்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருவதாகவும் அரசாங்கம் தங்களை மீட்க வேண்டுமென்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்கள் பிள்ளைகள் படும் துயரத்தை அறிந்து கண்ணீர் விடும் பெற்றோர்கள், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய - மாநில அரசுகளிடம் கோரியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com