"உயிரை காப்பாற்றிக் கொண்டு திரும்பி செல்லுங்கள்" - உக்ரைன் அதிபர் பகிரங்க எச்சரிக்கை!

"உயிரை காப்பாற்றிக் கொண்டு திரும்பி செல்லுங்கள்" - உக்ரைன் அதிபர் பகிரங்க எச்சரிக்கை!
"உயிரை காப்பாற்றிக் கொண்டு திரும்பி செல்லுங்கள்" - உக்ரைன் அதிபர் பகிரங்க எச்சரிக்கை!

"உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமெனில், வந்த வழியே திரும்பி செல்லுங்கள்" என்று ரஷ்ய படையினருக்கு உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் மீது 5-வது நாளாக ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோ கூட்டமைப்பின் கடும் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா இந்தப் போரில் ஈடுபட்டுள்ளது. இதில் இரு தரப்பிலும் பெருமளவு உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சூழலில், உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக ரஷ்யா அறிவித்தது. ரஷ்யாவின் இந்த அழைப்பை முதலில் ஏற்க மறுத்த உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி, பின்னர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, பெலாரஸ் நாட்டின் எல்லைப் பகுதி ஒன்றில் உக்ரைன் உயர்நிலைக் குழுவினரும், ரஷ்ய பிரதிநிதிகளும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். போரை நிறுத்த வேண்டுமென்றால், உக்ரைன் சில விஷயங்களை செய்ய வேண்டும் என ரஷ்யா பல நிபந்தனைகளை விதித்து வருவதாக தெரிகிறது.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவர், "ரஷ்ய ராணுவ வீரர்கள் தங்கள் உயிரை காப்பாற்ற நினைத்தால், உக்ரைனில் இருந்து திரும்பிச் சென்று விடுங்கள்" என எச்சரித்துள்ளார். ரஷ்யா - உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில், உக்ரைன் அதிபரின் இந்த எச்சரிக்கை பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com