\
இரவிலும் தாக்குதலை நிறுத்தாத ரஷ்ய படையினர்

இரவிலும் தாக்குதலை நிறுத்தாத ரஷ்ய படையினர்

இரவிலும் தாக்குதலை நிறுத்தாத ரஷ்ய படையினர்
Published on

பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் ஒப்புக்கொண்ட போதிலும் அந்நாட்டில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ககோவ்கா நகரில் இரவிலும் ஏவுகணைகளை வீசி ரஷ்ய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். சபரோசியா நகரத்தில் விமான நிலையத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. செர்காசி என்ற இடத்திலும் குடியிருப்புகள் அருகே குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக உக்ரைன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதே ஊரின் மற்றொரு பகுதியிலும் மிகப்பெரிய தாக்குதலை ரஷ்ய படையினர் நடத்தியுள்ளனர். தலைநகர் கீவ்-வில் பள்ளிக்கூடம் ஒன்றின் அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பகுதி கட்டடம் தீப்பற்றி எரிந்தது. மோசிர் என்ற இடத்தில் இரவில் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com