”அணு ஆயுதப் படை தயார்நிலையில் உள்ளது” - ரஷ்ய பாதுகாப்புத் துறை தகவல்

”அணு ஆயுதப் படை தயார்நிலையில் உள்ளது” - ரஷ்ய பாதுகாப்புத் துறை தகவல்
”அணு ஆயுதப் படை தயார்நிலையில் உள்ளது” - ரஷ்ய பாதுகாப்புத் துறை தகவல்

உக்ரைனுடனான போர் தீவிரமாகி வரும் நிலையில், தங்கள் நாட்டின் அணு ஆயுதப் படை தயார் நிலையில் இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் 5 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதில் இருதரப்பிலும் பலத்த சேதங்கள் ஏற்படுத்துள்ளதாக ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உக்ரைன் மீதான படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

ஐரோப்பிய நாடுகளின் இந்த நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தங்கள் நாட்டின் அணு ஆயுதப் படையை தயார் நிலையில் இருக்குமாறு நேற்று உத்தரவிட்டார். இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ரஷ்யாவின் அணு ஆயுத மும்முனைப் படைகள் தயாராக இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தரையிலிருந்து ஏவப்படும் அணு ஆயுதம், அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கி கப்பல், ஏவுகணைகள் கொண்ட விமானங்கள் தயாராக இருப்பதாக ரஷ்யா கூறியுள்ளது.

பெலாரஸில் இருநாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் ரஷ்யாவின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com