"ரஷ்ய வீரர்களுக்கு அது போதுமானதாக இல்லை" - போட்டுடைத்த உக்ரைன் அதிபர்

"ரஷ்ய வீரர்களுக்கு அது போதுமானதாக இல்லை" - போட்டுடைத்த உக்ரைன் அதிபர்

"ரஷ்ய வீரர்களுக்கு அது போதுமானதாக இல்லை" - போட்டுடைத்த உக்ரைன் அதிபர்
Published on

உக்ரைனுக்குள் நுழைந்திருக்கும் ரஷ்ய படையினர் எங்கு சென்றாலும் அழிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் ரஷ்ய ராணுவத்தினர் நடத்தி வரும் தாக்குதல் 8-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா - உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் அதில் சுமூக முடிவு ஏதும் எட்டப்படவில்லை. இதனால் உக்ரைன் போர் மேலும் தீவிரமாகும் சூழல் எழுந்துள்ளது.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

உக்ரைனின் பல பகுதிகளுக்கு ரஷ்ய படையினர் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆனால் ஒரு இடத்தில் கூட அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. ஏனெனில், தாய்நாட்டை காப்பதற்காக லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள், ராணுவத்தினருடன் இணைந்து ரஷ்ய படைகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். மக்களின் இந்த எழுச்சியை ரஷ்ய ராணுவ வீரர்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. உக்ரேனியர்களின் வீரத்தை பார்த்து ரஷ்ய படையினர் பல இடங்களில் இருந்து பின்வாங்கி வருவதாக செய்திகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற பகுதிகளில், ரஷ்ய வீரர்களை உக்ரைன் மக்கள் சிறைப்பிடித்துள்ளனர். அவர்களிடம் ஏன் உக்ரைனுக்குள் வந்தீர்கள் எனக் கேட்டால், 'எங்களுக்கு தெரியாது' எனக் கூறுகிறார்கள். குறிக்கோள் இன்றி உக்ரைனுக்குள் ஊடுருவியிருக்கும் ரஷ்ய வீரர்களால் என்ன சாதித்துவிட முடியும்? அவர்கள் எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும், உக்ரைனில் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என செலன்ஸ்கி கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com