'உயிருக்கு குறி வைத்தார்கள்" ரஷ்யாவின் சதித்திட்டத்தை உடைத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

'உயிருக்கு குறி வைத்தார்கள்" ரஷ்யாவின் சதித்திட்டத்தை உடைத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
'உயிருக்கு குறி வைத்தார்கள்" ரஷ்யாவின் சதித்திட்டத்தை உடைத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

தன்னை கொலை செய்யும்படி கூலிப்படையினருக்கு ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் உத்தரவிட்டிருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷிய படைகள் தாக்கி வருகின்றன. தலைநகர் கீவ் நகரின் குடியிருப்பு பகுதிகளை ரஷிய படைகள் நேற்று தாக்கின. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கீவ் நகரில் இருந்து வெளியேறினர்.

இந்த நிலையில் தன்னை கொலை செய்யும்படி கூலிப்படையினருக்கு ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் உத்தரவிட்டிருப்பதாகவும் இதற்கென்று 400-க்கும் மேற்பட்ட ரஷ்ய கூலிப்படையினர் தற்போது கீவ் நகரில் சுற்றி வருவதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். தன்னை கொன்று விட்டால் உக்ரைனை கட்டுப்படுத்தி விடமுடியும் என ரஷ்யா எண்ணுகிறது எனவும் அவர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ரஷிய படைகள் தாக்குதலில் 68 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ரஷ்ய படையெடுப்பின் தொடக்கத்திலிருந்து சுமார் 3,68,000 உக்ரேனியர்கள் அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக அகதிகள் நிறுவனம் கூறுகிறது.

இதையும் படிக்க: ருமேனியா எல்லையில் தவிக்கும் 300 தமிழக மாணவர்கள்: மீட்பு எப்போது என காத்திருக்கும் சோகம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com