அணு ஆயுத போர் குறித்து இந்த நாடுகளே யோசிக்கின்றன - ரஷ்யா கூறிய அதிர்ச்சி கருத்து

அணு ஆயுத போர் குறித்து இந்த நாடுகளே யோசிக்கின்றன - ரஷ்யா கூறிய அதிர்ச்சி கருத்து
அணு ஆயுத போர் குறித்து இந்த நாடுகளே யோசிக்கின்றன - ரஷ்யா கூறிய அதிர்ச்சி கருத்து

"அணு ஆயுத போர் குறித்து மேற்கத்திய நாடுகள் தான் யோசித்து வருகின்றன" என்று ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் கூறியுள்ளார்.

உக்ரைன் போர் தீவிரமாகி வரும் நிலையில், ரஷ்யா நேற்று திடீரென மூன்றாம் உலகப் போர் குறித்தும், அணு ஆயுதம் குறித்தும் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

அந்த அறிவிப்பில், 'மூன்றாம் உலகப்போர் மிக மோசமானதாக இருக்கும்; அந்தப் போரில் அணு ஆயுதம் ஏற்படுத்தும் விளைவுகள் கடுமையானதாக இருக்கும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ரஷ்யாவின் இந்த திடீர் அறிவிப்பு மேற்கத்திய நாடுகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை என சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். ஏற்கனவே, ரஷ்யாவின் அணு ஆயுதப் படையை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவு பிறப்பித்திருந்த சூழலில், ரஷ்ய வெளியுறவுத் துறை விடுத்த இந்த எச்சரிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் இன்று ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில், "உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் வைத்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல், ரஷ்யாவை நேட்டோ படைகளை கொண்டு தாக்குவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் தற்காப்பு நடவடிக்கையாகவே எங்கள் அணு ஆயுதப் படையை தயார் நிலையில் வைத்திருக்கிறோம். மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் தான் அணு ஆயுத போர் குறித்து யோசித்து வருகின்றனர். நாங்கள் ரஷ்யாவின் பாதுகாப்பு குறித்து மட்டுமே யோசித்து வருகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com