உக்ரைனின் 4 பகுதிகள் ரஷ்யாவுடன் இணைப்பு - ஆணை பிறப்பித்தார் அதிபர் புடின்

உக்ரைனின் 4 பகுதிகள் ரஷ்யாவுடன் இணைப்பு - ஆணை பிறப்பித்தார் அதிபர் புடின்

உக்ரைனின் 4 பகுதிகள் ரஷ்யாவுடன் இணைப்பு - ஆணை பிறப்பித்தார் அதிபர் புடின்

உக்ரைன் நாட்டின் 4 பகுதிகளை ரஷ்ய பகுதிகளாக அங்கீகரிக்கும் அதிகாரப்பூர்வ ஆணையில் அதிபர் புதின் கையெழுத்திட்டார்.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது ரஷ்யா. ஏழு மாதங்களைக் கடந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தப் போரில் உக்ரைனின் பல பகுதிகள் ரஷ்யா வசம் வந்துள்ளன. இந்த நிலையில், உக்ரைனின் கிழக்குப் பகுதியிலுள்ள லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன், ஜப்ரோஷியா ஆகிய நான்கு பிராந்தியங்களைத் தங்களுடன் இணைத்துக் கொள்ளப்போவதாக அண்மையில் அறிவித்திருந்தது ரஷ்யா.

இது தொடர்பாக, அந்த நான்கு பிராந்தியங்களிலுள்ள மக்களிடமும் ரஷ்யா தரப்பிலிருந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் வாக்கெடுப்பு நடத்தினால், முடிவுகள் ரஷ்யாவுக்குச் சாதகமாகவே வரும் என்றும் இது சர்வதேச சட்டத்தின் கோட்பாடுகளை மீறும் நடவடிக்கை என்றும் எனவே இந்த வாக்கெடுப்பு நடத்தப்படக்கூடாது எனவும் மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்தன.  ஆனால் இந்த எதிர்ப்புகளையும் மீறி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

செப்டம்பர் 27ஆம் தேதி பொது வாக்கெடுப்பு முடிந்த நிலையில், அந்த வாக்கெடுப்பின் முடிவுகள் ரஷ்யாவுக்குச் சாதகமாக வந்தன. இதைதொடர்ந்து உக்ரைனின் இந்த 4 பிராந்தியங்களையும் ரஷியாவுடன் இணைத்து கொள்வது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிபர் விளாடிமிர் புதின்  இன்று வெளியிட்டார். மாஸ்கோவின் கிரெம்லின் மாளிகையில் உள்ள புனித ஜார்ஜ் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உக்ரைனின் 4 பகுதிகளை ரஷிய பகுதிகளாக அதிபர் விளாடிமிர் புதின் பிரகடனப்படுத்தினார்.

இதையும் படிக்க: ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பயங்கர தாக்குதல் - காபூலில் குண்டுவெடிப்பில் 100 குழந்தைகள் பலி?

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com