உக்ரைனுக்கு பெருகும் ஆதரவு: உலகளவில் அதிகரிக்கும் போராட்டங்கள்

உக்ரைனுக்கு பெருகும் ஆதரவு: உலகளவில் அதிகரிக்கும் போராட்டங்கள்

உக்ரைனுக்கு பெருகும் ஆதரவு: உலகளவில் அதிகரிக்கும் போராட்டங்கள்
Published on

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை கண்டித்து லத்தீன் அமெரிக்க நாடுகளில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அர்ஜென்டினாவில் அதிக அளவிலான உக்ரைனிய மக்கள் வாழும் நிலையில், தங்கள் நாட்டின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை கண்டித்து தலைநகர் பியூனஸ் அயர்சில் உள்ள ரஷ்ய தூதரகம் நோக்கி நூற்றுக்கணக்கானோர் ஊர்வலமாக சென்றனர். ரஷ்யாவை கண்டித்தும், போரை நிறுத்துமாறும் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்திச்சென்றனர். உக்ரைனில் உள்ள தங்கள் உறவினர்களின் நிலை குறித்து போராட்டக்காரர்கள் கவலை தெரிவித்தனர்.

இதேபோல, பிரேசில், மெக்சிகோ, பெரு உள்ளிட்ட நாடுகளிலும் போரை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன. போரை நிறுத்தக்கோரி முழக்கங்கள் எழுப்பிய மக்கள், உக்ரைனில் இருந்து ரஷ்யப்படைகள் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com