கீவ் மீது தீவிரமடையும் ரஷ்யாவின் தாக்குதல் - உயிர் பிழைக்க வெளியேறும் உக்ரைன் மக்கள்

கீவ் மீது தீவிரமடையும் ரஷ்யாவின் தாக்குதல் - உயிர் பிழைக்க வெளியேறும் உக்ரைன் மக்கள்

கீவ் மீது தீவிரமடையும் ரஷ்யாவின் தாக்குதல் - உயிர் பிழைக்க வெளியேறும் உக்ரைன் மக்கள்
Published on

கீவ் நகரத்தை ரஷ்யா கைப்பற்ற ரஷ்யா முனைப்பு காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அங்குள்ள உக்ரேனியர்கள் அவசரமாக வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

இதனால் கீவிலுள்ள ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர். வீடுகள், சொத்துகள் உள்ளிட்டவற்றை கைவிட்டு அவசியப் பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவர்கள் வெளியேறி வருகின்றனர். ரயில் மூலம் நாட்டின் கிழக்கு எல்லையை அடைந்து அங்கிருந்து அண்டை நாடுகளில் தஞ்சமடைய கீவ் நகர மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். உக்ரைனின் கிழக்கு எல்லையை அடைந்த பலர் போலந்திற்கு செல்ல காத்துக்கொண்டுள்ளனர். இதற்கு மேல் உக்ரைனில் இருந்தால் உயிர் தப்புவது கடினம் என அவர்கள் கூறுவதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் இரண்டரை லட்சம் பேர் 12 இடங்களில் தங்கள் நாட்டில் தஞ்சம் புக எல்லையில் காத்திருப்பதாக போலந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உக்ரைனை விட்டு வெளியேற முடியாத பலர் வீடுகளுக்கு கீழ் உள்ள நிலவறைகளில் பதுங்கியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com