தாக்கப்பட்ட அணு உலையிலிருந்து கதிர்வீச்சு வெளியானதா? - ஐநா விளக்கம்

தாக்கப்பட்ட அணு உலையிலிருந்து கதிர்வீச்சு வெளியானதா? - ஐநா விளக்கம்
தாக்கப்பட்ட அணு உலையிலிருந்து கதிர்வீச்சு வெளியானதா? - ஐநா விளக்கம்

ரஷ்ய தாக்குதலின்போது தீப்பிடித்த அணுமின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு எதுவும் வெளியாகவில்லை என உக்ரைனும் ஐநா அணு மின்சக்தி முகமையும் தெரிவித்துள்ளன.

உக்ரைனில் உள்ள சபோரிசியா அணுமின் நிலையத்தை ரஷ்ய படைகள் தாக்கியதில் அங்கு தீப்பிடித்தது. இதனால் கதிர்வீச்சு அபாயம் எழுந்தது. இந்நிலையில் அங்கு சோதித்த உக்ரைன் மற்றும் ஐநா நிபுணர்கள் குழு, கதிர்வீச்சு எதுவும் வெளியாகவில்லை என தெரிவித்துள்ளது. பெரும் முயற்சிகளுக்கு பின் தீ அணைக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா வீசிய ஏவுகணை அணுமின் நிலைய உலைகளை தாக்கவில்லை என்றும் அருகே இருந்த பயிற்சி மையத்தை மட்டுமே தாக்கியதாகவும் ஐநா அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது. முன்னதாக அணுமின் நிலையம் மீதான தாக்குதலை தொடர்ந்து பேசிய உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, இது முழுமையான அழிவுக்கு காரணமாகிவிடும் என அச்சம் தெரிவித்திருந்தார். அணுமின் நிலைய தாக்குதல் குறித்து விவாதிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் நடைபெற்றது.

அதில் பேசிய இந்திய பிரதிநிதி திருமூர்த்தி, உக்ரைன் அணுமின்நிலையங்களை தாக்குதலில் இருந்து பாதுகாக்க அதிகபட்ச முன்னுரிமை தரப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். உக்ரைன் அணுமின் நிலையத்தை தாங்கள் தாக்கவில்லை என்றும் அந்நாட்டினரே தாக்குதலில் ஈடுபட்டதாகவும் ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com