'இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாகத் தவிப்பு' எண்ணிக்கையை அறிவித்த ரஷ்ய அதிபர் புடின்
உக்ரைனில் 3,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர் என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து உக்ரைன் நகரங்களில் தங்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு செய்து வருகின்றது. உக்ரைனின் அண்டை நாடுகளின் எல்லைகளுக்கு வரும்படி அனைவருக்கும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியது. தொடர்ந்து, அண்டை நாடுகளுக்கு செல்வதற்காக ரயில் ஏறச் சென்ற இந்திய மாணவர்களை உக்ரைன் பாதுகாப்புப் படையினர் தடுப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டும் விடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
இதனிடையே இந்தியாவைச் சேர்ந்த 3,000 மாணவர்கள் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளார். "உக்ரைன் வெளி நாட்டினரை வெளியேற்றுவதை தாமதப்படுத்த முயற்சிக்கிறது, இதன் காரணமாக அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள்" என்று புடின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ரஷ்யா போரை நிறுத்துமாறு ஐ.நா.வில் தீர்மானம்... இந்தியா என்ன நிலைப்பாடு தெரியுமா?