உக்ரைனுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் - ரஷ்ய அதிபர் புடின்

உக்ரைனுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் - ரஷ்ய அதிபர் புடின்
உக்ரைனுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் - ரஷ்ய அதிபர் புடின்

உக்ரைனுடனான பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 24-ம் தேதி முதல் உக்ரைனில் தாக்குதல் நடத்தி வருகிறது ரஷ்யா. உக்ரைனின் பல முக்கிய நகரங்களை சுற்றி வளைத்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது.

போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் பெலராஸில் இரு முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இவை தவிர, துருக்கியில் இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் அண்மையில் சந்தித்து பேசினர். ஆனால், இந்த பேச்சுவார்ததைகளில் சமூகமான முடிவு ஏதும் எட்டப்படவில்லை எனக் கூறப்பட்டது. இதனால் போர் தொடர்ந்து நீடிக்கும் சூழலும் உருவானது.

இந்த நிலையில், பெலாராஸ் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, தொலைக்காட்சியில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைனுடனான பேச்சுவார்த்தையில், சில நேர்மறை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்றார். எனினும் விரிவான விவரங்களை அவர் வெளியிடவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com