சர்வதேச பண பரிவர்த்தனை- "ஸ்விஃப்ட்" வங்கி முறையிலிருந்து ரஷ்யா நீக்கம்

சர்வதேச பண பரிவர்த்தனை- "ஸ்விஃப்ட்" வங்கி முறையிலிருந்து ரஷ்யா நீக்கம்

சர்வதேச பண பரிவர்த்தனை- "ஸ்விஃப்ட்" வங்கி முறையிலிருந்து ரஷ்யா நீக்கம்
Published on

சர்வதேச பண பரிவர்த்தனையிலிருந்து ரஷ்யா-வை நீக்கி உலக நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.

உக்ரைன் மீது உக்கிரமாக போர் தொடுத்து வரும் ரஷ்யாவுக்கு எதிராக உலக நாடுகள் அணி திரண்டுள்ளன. ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், விரைவான சர்வதேச பணபரிவர்த்தையான SWIFT எனப்படும் வங்கி முறையிலிருந்து ரஷ்யா நீக்கப்பட்டுள்ளது. சுமார் 200 நாடுகளில் உள்ள 11 ஆயிரம் நிதி நிறுவனங்களால் SWIFT சேவை பயன்படுத்தப்படுகிறது. இந்த SWIFT முறையிலிருந்து ரஷ்யாவின் வங்கிகளை நீக்கி அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா நாடுகள் முடிவு செய்துள்ளன.

இதன்மூலம், சர்வதேச அளவில் ரஷ்யாவால் பண பரிவர்த்தனை செய்ய முடியாத நிலை ஏற்படும். எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட ஏற்றுமதிக்கு ரஷ்யா பணம் பெறுவது தாமதமாகும். இருப்பினும், பிற அமைப்புகள் மூலம் பணம் பெற ரஷ்யா முயற்சிகளை மேற்கொள்ளும். குறிப்பாக சீனாவின் எல்லை கடந்த வங்கிகளுக்கு இடையிலான கட்டண முறையை ரஷ்யா பயன்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

SWIFT முறையில் ரஷ்யாவுக்கு தடை விதித்தால், ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயுவை ரஷ்யா அனுப்பாது என ஏற்கனவே அந்நாடு எச்சரித்திருந்த நிலையில், தற்போது எண்ணெய் ஏற்றுமதி கேள்விக்குறியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com