\
உக்ரைன் - ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவர் உயிரிழப்பு - மத்திய வெளியுறவுத்துறை தகவல்

உக்ரைன் - ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவர் உயிரிழப்பு - மத்திய வெளியுறவுத்துறை தகவல்

உக்ரைன் - ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவர் உயிரிழப்பு - மத்திய வெளியுறவுத்துறை தகவல்
Published on: 

உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா இன்று காலையிலிருந்தே தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் கார்கிவ் நகரிலிருந்து வெளியேற ரயில்நிலையம் செல்லும்போது நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி கர்நாடகா மாணவர் நவீன் உயிரிழந்ததாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்திருக்கிறது. உயிரிழந்த மாணவனின் பெற்றோருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் கூறியிருக்கிறது. மேலும் உக்ரைன் மற்றும் ரஷ்ய அரசுகள் அங்கிருக்கக்கூடிய இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும் என்று சம்பந்தப்பட்ட தூதர்களை அழைத்து வலியுறுத்தி இருப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கார்கிவ் நகரில் நிலைமை மோசமாகிக்கொண்டே இருப்பதாகவும் அங்கு சிக்கியுள்ள மாணவர்கள் தங்கள் சமூக வலைதள பக்கங்கள் மூலமும், தொலைபேசி மூலமும் தகவல் அளித்துக்கொண்டே வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com