“கெர்சன் நகரை முழுமையாக கைப்பற்றிவிட்டோம்”- ரஷ்யா ராணுவம்

“கெர்சன் நகரை முழுமையாக கைப்பற்றிவிட்டோம்”- ரஷ்யா ராணுவம்

“கெர்சன் நகரை முழுமையாக கைப்பற்றிவிட்டோம்”- ரஷ்யா ராணுவம்
Published on

தெற்கு உக்ரைனிலுள்ள கெர்சன் நகரை முழுமையாக கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்திருக்கிறது.

உக்ரைனின் முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ் போன்ற இடங்களில் ரஷ்ய ராணுவம் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது. காவல்துறை அலுவலகம், தொலைக்காட்சி கோபுரம் போன்ற முக்கிய இடங்களின்மீதும் ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தெற்கு உக்ரைனிலுள்ள கெர்சன் நகரை முழுமையாக கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்திருக்கிறது.

கப்பல் கட்டும் தொழிற்சாலைகள், துறைமுகங்கள் நிறைந்த கெர்சன், உக்ரைனின் முக்கிய தொழில் நகரமாகும். சுமர் 3 லட்சம் மக்கள் தொகையுடைய கெர்சன் நகரில் 20% பேர் ரஷ்ய நாட்டினர் வசித்துவருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com