உக்ரைன் மக்களுக்காக பல்வேறு நாடுகள் உதவி வரும் சூழலில், பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்ட லாரியை, போலந்து வரை தானே ஒட்டிச் சென்றுள்ளார்.
இது தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அவர், உக்ரைன் அகதிகளுக்கு உதவ, பிரிட்டன் மக்கள் தாரளாமாக பொருளுதவி வழங்கியதற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேற்கு ஆக்ஸ்போர்டு ஷையரில் உள்ள சிப்பிங் நார்டான் நகரில் இயங்கும் உள்ளூர் தன்னார்வ அமைப்புடன் இணைந்து, போலந்தில் தஞ்சம் அடைந்திருக்கும் உக்ரைன் அகதிகளுக்காக நன்கொடைகளை வசூலித்தார்.
அதில் சேர்ந்த பணத்துடன் தேவையான உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் நிவாரணப் பொருட்களை வாங்கியதுடன், பொருட்கள் ஏற்றப்பட்ட லாரியை போலந்து வரை டேவிட் கேம்ரூன் தாமே ஒட்டிச் சென்றார்.