சுமியில் சிக்கியுள்ள 700 இந்தியர்களை மீட்க உதவவில்லை - இந்தியா அதிருப்தி
உக்ரைனின் சுமியில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க உதவுமாறு அந்நாட்டு அரசுக்கும், ரஷ்யாவுக்கும் அடுத்தடுத்து வேண்டுகோள் விடுத்தும் அது ஏற்கப்படவில்லை என இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது.
ஐநா பாதுகாப்பு சபை கூட்டத்தில் பேசுகையில் இந்திய பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி தனது அதிருப்தியை வெளியிட்டார். அதில், போர் தீவிரமாக நடந்து வரும் சுமி பகுதியில் சுமார் 700 இந்திய மாணவர்கள் சிக்கியிருப்பதாகவும், அவர்களை பாதுகாப்பாக மீட்க ஏற்பாடு செய்து தருமாறு உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் பல முறை கேட்டுக்கொண்டும் அது பலன் தரவில்லை என்றும் திருமூர்த்தி தெரிவித்தார்.
எனினும் உக்ரைனின் மற்ற பகுதிகளில் இருந்து 20 ஆயிரம் மாணவர்களை இந்தியாவுக்கு மீட்டுச்சென்றுள்ளதாக திருமூர்த்தி தெரிவித்தார். இந்திய மாணவர்கள் தவிர பிற நாட்டு மாணவர்கள் சிலரும் உக்ரைனிலிருந்து பாதுகாப்பாக வெளியேற உதவியதாகவும் திருமூர்த்தி தெரிவித்தார்.