உக்ரைன் மீது போர் தொடுத்ததன் காரணமாக ஐரோப்பிய கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது இரண்டு நாள்களாக ரஷ்ய படைகள் பயங்கர தாக்குதலை நடத்தி வருகின்றன. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு ஐரோப்பிய கவுன்சிலும், நேட்டோ கூட்டமைப்பும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
இந்நிலையில், ஐரோப்பிய கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை அந்த அமைப்பு இடைநீக்கம் செய்துள்ளது. ஐரோப்பிய கவுன்சிலில் 'பிரதிநிதித்துவத்துக்கான உரிமை' என்ற அடிப்படையில் ரஷ்யா உறுப்பினராக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.