\
உக்ரைனில் பற்றி எரியும் கார்கிவ் நகரம் - குறிவைத்து தாக்கும் ரஷ்யா

உக்ரைனில் பற்றி எரியும் கார்கிவ் நகரம் - குறிவைத்து தாக்கும் ரஷ்யா

உக்ரைனில் பற்றி எரியும் கார்கிவ் நகரம் - குறிவைத்து தாக்கும் ரஷ்யா
Published on

உக்ரைனில் ரஷ்யப்படைகளின் தாக்குதலால் கார்கிவ் நகரில் உள்ள சந்தைப்பகுதி முழுவதும் பற்றி எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

கார்கிவ் நகரின் மேற்குப் பகுதியில் அனைத்து வகையான பொருள்களும் வாங்கும் வகையில் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் ரஷ்யப் படையினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இதில் வணிக நிறுவனங்கள் பற்றி எரிகின்றன. ஒரே நேரத்தில் பற்றி எரியும் நெருப்பினால் அப்பகுதி முழுவதும் கடும் வெப்பம் நிலவுகிறது. கரும்புகையும் சூழ்ந்துள்ளது. நெருப்பைக் கட்டுப்படுத்தும் பணிகளில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.



கடந்த சில மாதங்களாகவே உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதிகளில் தனது படைகளை குவிக்க தொடங்கிய ரஷ்யா, பிப்ரவரி 24ஆம் தேதி முதல் உக்ரைன் நகரங்கள் மீது தீவிர தாக்குதலை நடத்த தொடங்கியது. போரை நிறுத்துவதற்காக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடந்த பலவேறு கட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வியடைந்த நிலையில், தற்போது உக்ரைன் நகரங்கள் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. ரஷ்யாவின் தீவிர தாக்குதல் காரணமாக உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் உருக்குலைந்து வருகின்றன.


logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com