கருங்கடலில் உக்ரைன் பயங்கர தாக்குதல் - ரஷ்ய போர்க் கப்பல் தகர்ப்பு!

கருங்கடலில் உக்ரைன் பயங்கர தாக்குதல் - ரஷ்ய போர்க் கப்பல் தகர்ப்பு!
கருங்கடலில் உக்ரைன் பயங்கர தாக்குதல் - ரஷ்ய போர்க் கப்பல் தகர்ப்பு!

கருங்கடலில் நேற்று இரவு உக்ரைன் ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ரஷ்ய போர்க் கப்பல் ஒன்று தகர்க்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது. எனினும், ரஷ்யா இதனை மறுத்து வருகிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலில் 7 வாரங்களையும் கடந்து நீடித்து வருகிறது. உக்ரைனை சுற்றி வளைத்து ரஷ்ய ராணுவம் நடத்துகிறது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் நிர்மூலமாகியுள்ளன. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இருந்தபோதிலும், உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்யாவால் இன்னும் கைப்பற்ற முடியவில்லை. இதனால் தனது போர் வியூகத்தை ரஷ்யா மாற்றியமைத்துள்ளது.

அதன்படி, வான் வழி தாக்குதல்களை குறைத்துவிட்டு கருங்கடலில் இருந்து உக்ரைனின் கடற்கரை நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது. இதன் மூலம் கிழக்கு பகுதிகளை எளிதில் வீழ்த்தி, தலைநகர் கீவ்வை கைப்பற்றிவிடலாம் என ரஷ்யா திட்டமிட்டுள்ளது. ஆனால், உக்ரைன் கடற்படையினர் கடந்த சில தினங்களாக கருங்கடலில் மூர்க்கமான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, உக்ரைனுக்கு அமெரிக்கா பெரும் ஆயுத உதவிகளை வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு கருங்கடல் பகுதியில் இருக்கும் ரஷ்ய போர்க்கப்பல்கள் மீது உக்ரைன் திடீர் வான்வழி தாக்குதலையும், கடல் வழி தாக்குதலையும் மேற்கொண்டது. இதனை சற்றும் எதிர்பாராத ரஷ்யப் படையினர் நிலைமையை சமாளிக்க முடியாமல் திணறினர். அப்போது, உக்ரைனின் ஏவுகணை தாக்குதலில் ரஷ்யாவின் 'மோஸ்க்வா' என்ற போர்க்கப்பல் கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டது. அந்தக் கப்பலில் எத்தனை ரஷ்ய வீரர்கள் இருந்தார்கள் என்பது தெரியவில்லை. உக்ரைன் அரசு இன்று காலை இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இருந்தபோதிலும், ரஷ்ய ராணுவம் இந்த தகவலை மறுத்து வருகிறது. கடல் கொந்தளிப்பால் கப்பல் கட்டுப்பாட்டை இழந்ததால் அதற்குள் இருந்த வெடிப்பொருள்கள் வெடித்ததில் இந்த விபத்து நேரிட்டதாக ரஷ்யா கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com