ரஷ்யா - உக்ரைன்
தீவிரமடையும் உக்ரைன் போர் - ரஷ்யாவில் விற்பனையை நிறுத்திய சாம்சங்
தீவிரமடையும் உக்ரைன் போர் - ரஷ்யாவில் விற்பனையை நிறுத்திய சாம்சங்
சாம்சங், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் விற்பனையை நிறுத்தியுள்ளன.
உக்ரைனில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும், அதனை பொறுத்தே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் சாம்சங் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், மைக்ரோசாப்ட் நிறுவனமும் விற்பனை மற்றும் சேவையை ரஷ்யாவில் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அதே சமயம் உக்ரைனில் இணையதள பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மைக்ரோசாப்ட் உறுதியளித்துள்ளது. ஆப்பிள், சோனி, கூகுள், டிஸ்னி, யூனிவர்செல், INTEL, BMW, FORD, HONDA உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கெனவே ரஷ்யாவில் தங்கள் சேவையை நிறுத்தியுள்ளன.