இந்தியாவில் டெஸ்லா கார்.. மும்பையின் பருவமழைக்கு தாக்கு பிடிக்குமா? வைரல் வீடியோ..!
நீண்டகால எதிர்பார்ப்பிற்கு, டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்குள் நுழைந்துள்ளது. இது தனது ஷோரூமை மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் (BKC) உள்ள மேக்கர் மேக்சிட்டி மாலில், திறந்துள்ளது, இந்திய சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து X தளத்தில் பதிவிட்ட டெஸ்லா, இனி டெஸ்லா காரை இந்தியர்கள் அனைவரும் நேரடியாக டெஸ்லாவின் அதிகாரபூர்வ வலைதளத்திலேயே ஆர்டர் செய்யலாம் என அறிவித்தது. அதில் டெஸ்லா முதலில் முக்கிய மெட்ரோ நகரங்களில் கவனம் செலுத்துவதாகவும், மும்பை, புனே, டெல்லி மற்றும் குருகிராமில் டெலிவரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
மும்பையின் முதல் டெஸ்லா ஷோரூம்
மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் (BKC) உள்ள மேக்கர் மேக்சிட்டி மாலில், திறந்துள்ளது, தலைமை கட்டிடக் கலைஞர் நீதா சாரதா தலைமையிலான குழுவினர் இந்த ஷோரூமை வடிவமைத்துள்ளானர். இது உலகளாவிய அழகியலை இந்திய கலாச்சார கூறுகளுடன் கலந்து ஒரு தனித்துவமான சூழலை உருவாக்குகிறது.
மாடல் Y குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்
இந்தியாவில் டெஸ்லா நிறுவனம், ஆரம்பத்தில் மாடல் Yஇன் இரண்டு வகைகளை வியாபாரம் செய்ய இருக்கிறது. ஒன்று, பின்புற சக்கர இயக்கி வேரியண்ட்டின் விலை ரூ. 60.1 லட்சத்துடன் தொடங்குகிறது. மற்றொன்று, நீண்ட தூர பதிப்பு ரூ. 67.8 லட்சத்துடன் கிடைக்கிறது. இது டெஸ்லாவின் வருகையை நீண்டகாலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்திய மின்சார வாகன பிரியர்களுக்கு இந்த வெளியீடு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
நீங்கள் எங்கிருந்து ஆர்டர் செய்யலாம்?
இந்தியாவின் கிட்டத்தட்ட எல்லா மூலைகளிலிருந்தும் மக்கள் இப்போது தங்கள் டெஸ்லா ஆர்டர்களை செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத், பஞ்சாப், கேரளா, மேற்கு வங்காளம் போன்ற முக்கிய மாநிலங்களும், லடாக், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மிசோரம் போன்ற தொலைதூரப் பகுதிகளும் கூட அடங்கும்.
மும்பையின் வெள்ளம் சூழ்ந்த சாலைகளுக்கு டெஸ்லா சரியாக இருக்குமா?
மும்பையில் பருவமழை, அதன் தெருக்களை ஆறுகளாக மாற்றிவிடும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.. ஒவ்வொரு ஆண்டும், மும்பை நகரம் மழைக்காலங்களில் கடுமையான நீர் தேக்கத்தை எதிர்கொள்கிறது. இதில் குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வாகனங்களை இயக்குவது என்பது சவாலாக இருக்கும்.. எனவே இப்போது பெரிய கேள்வி என்னவென்றால்? டெஸ்லா போன்ற மின்சார கார்கள் இத்தகைய கடுமையான பருவமழை சூழ்நிலைகளில் இயங்கவும் வளரவும் முடியுமா? என்பதுதான்..
இதற்கு பதில் கொடுக்கும்படியாக X தளத்தில் ஒருவர் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.. அதில் இந்தியாவின் ஆழமான வெள்ள நீரில் டெஸ்லா மாடல் 3 கார் சீராக சறுக்குவதைப் பற்றிய ஒரு வியக்க வைக்கும் வீடியோவைப் பகிர்ந்து கொண்டது, அத்துடன் அதில் கம்பீரமாக ஒரு தலைப்பையும் எழுதியிருந்தது.. (Tesla is ready for Indian monsoon ) அந்த வீடியோவில் டெஸ்லா கார் பார்பதற்கு ஒரு படகு போல் காட்சியளித்தது. மேலும் இந்த வீடியோவில் மாடல் 3 டெஸ்லா கார், முழங்கால் அளவு வரை உள்ள தண்ணீரில் நிற்காமல் அழகாக செல்வதை காணலாம்.. அது இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது..
டெஸ்லா எப்படி நீரில் மிதக்கிறது?
டெஸ்லா கார்கள் சீல் செய்யப்பட்ட பேட்டரி பேக் மற்றும் பக்ஷகாற்று உட்கொள்ளலை நம்பியிருக்காத மின்சார டிரைவ்டிரெய்னுடன் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக காரின் முக்கியமான பகுதிகளுக்குள் தண்ணீர் நுழையும் ஆபத்து குறைவாக இருக்கும்.