2025 Honda SP160
2025 Honda SP160Web

ரூ. 1.22 லட்சத்தில் அறிமுகமானது 2025 ஆண்டிற்கான புதிய ஹோண்டா SP160...

2025 ஆம் ஆண்டிற்கான SP160 மாடல் பைக்கை புதுப்பித்துள்ளது ஹோண்டா நிறுவனம்.
Published on

இந்தியாவில் 2025 ஆம் ஆண்டிற்கான SP160 மாடல் பைக்கை புதுப்பித்துள்ளது ஹோண்டா நிறுவனம். அதற்கேற்ப, அதன் விலையும் சற்று அதிகரித்துள்ளது. Drum வேரியன்ட் ரூ.1,21,951 ஆகவும், Disc வேரியன்ட் ரூ.1,27,976 ஆகவும் எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயக்கப்பட்டுள்ளது. சிங்கிள் டிஸ்க் வேரியன்ட்டின் விலை ரூ.3,000 ஆகவும், அதே சமயம் டூயல் டிஸ்க் வேரியன்ட்டின் விலை ரூ.4,605 ​ஆகவும் ​உயர்த்தப்பட்டுள்ளது.

2025 Honda SP160
2025 Honda SP160Web

புதுப்பிக்கப்பட்ட SP160 பைக் அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வரவிருக்கும் OBD-2B விதிமுறைகளுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. இந்த வண்டி ஆனது 162.71சிசி சிங்கிள்-சிலிண்டர் எஞ்சினுடன் 13.2 பிஎச்பி மற்றும் 14.8 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும்.

2025 Honda SP160
அறிமுகமாகும் புதிய ஹோண்டா Hybrid-Electric Sport Car... எப்போது தெரியுமா?

ஹோண்டா நிறுவனம் SP160-யின் ஒரிஜினல் ஸ்டைலையும், தன்மையையும் மாற்றாமல் நான்கு வண்ணங்களில் வழங்கியுள்ளது. ஆறு வண்ணங்களில் கிடைத்த முந்தைய மாடலைப் போலல்லாமல், புதிய மாடல் ரேடியன்ட் ரெட் மெட்டாலிக், பேர்ல் இக்னியஸ் பிளாக், பேர்ல் டீப் கிரவுண்ட் கிரே மற்றும் அத்லெட்டிக் ப்ளூ மெட்டாலிக் உள்ளிட்ட நான்கு வண்ணங்களில் வருகிறது.

2025 Honda SP160
2025 Honda SP160web

Activa 125 மற்றும் SP125-யின் சமீபத்திய மேம்படுத்தல்களைத் தொடர்ந்து, தற்போது SP160 பைக் ஆனது மேம்படுத்தப்பட்ட 4.2-inch TFT டிஸ்ப்ளே மற்றும் USB-C சார்ஜிங் போர்ட்டைப் பெறுகிறது. அதுமட்டுமல்லாமல் முன்புறத்தில், புளூடூத் இணைப்புடன் ரைடர் டர்ன்-பை-டர்ன் நாவிகேஷன் மற்றும் Honda RoadSync பயன்பாட்டின் மூலம் கால் மற்றும் SMS அறிவிப்புகள் என பல அம்சங்களை கொண்டுள்ளது.

2025 Honda SP160
ரூ.91,771 விலையில் அறிமுகமானது புதிய 2025 ஹோண்டா SP125 பைக்.. சிறப்புகள் என்ன? முழு விவரம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com