‘எங்க போகணும்னு சொன்னா மட்டும் போதும்..’ Automatic-ஆக இயங்கும் டெஸ்லாவின் சிறப்பம்சங்கள்!

அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க், விரைவில் மின்சார கார் தொழிற்சாலையை இந்தியாவில் தொடங்க உள்ளதாக தெரிவித்தார். இந்த டெஸ்லா காரின் சிறப்பம்சங்கள் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மின்சார வாகன தயாரிப்புக்கு பெயர்பெற்ற அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் கார் உற்பத்தியை தொடங்க இருப்பதாக அந்நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தார். விலை உயர்ந்த டெஸ்லா மின்சார வாகனத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. சொகுசு என்ற சொல்லுக்கு ஏற்றார் போல், ஆட்டோ பைலட் முறையில் செல்லும் இடத்தின் விவரத்தை பதிவிட்டால் போதும், டெஸ்லா கார் தானியங்கியாக செயல்பட்டு நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லும்.

tesla car
tesla carpt desk

அதுமட்டுமில்லாமல் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏதுவாக எதிர்காலத்தில் எரிபொருள் சொகுசுக் காருக்கு இணையாக, சுயமாக வாகனங்களை இயக்கும் வசதியும் கொண்டுவரப்பட இருக்கிறது. சிறிது நேரத்திலேயே Charge ஆகிவிடும் டெஸ்லா காரை, ஒரு முறை charge செய்தால் போதும், தொலைதூரம் பயணம் மேற்கொள்ளலாம். 100 விழுக்காடு விபத்தை தவிர்க்கும் வகையில் Automatic Emergency Breaking என்ற முறையில் Sensor Control மூலம் தானாகவே வாகனத்தை நிறுத்தும் திறன் டெஸ்லா காரில் உள்ளது. அலைபேசியை போன்றே காருக்குள் Features Update செய்யும் முறை வழங்கப்பட்டுள்ளது.

மற்ற கார்களை விட அதிகமான Air bags டெஸ்லா காரில் உண்டு. கால நிலைக்கு ஏற்றார் போல் காரின் உள்ளே நிலவும் சூழலும் தானாகவே மாறிவிடும்... இத்தனை சிறப்பு அம்சங்கள் கொண்ட டெஸ்லா கார் தமிழகத்தில் வர அதிக வாய்ப்பு உள்ளதாகவும், குறிப்பாக சென்னையில் ஆட்டோமொபைல் உபகரணங்கள் வலுவாக இருப்பதால் டெஸ்லா நிறுவனம் காலூன்ற சாதகமாக இருக்கும். “அனைத்து சிறப்பு அம்சங்களை கொண்டிருந்தாலும் ஆடம்பர சொகுசு மின்சார வாகனமான டெஸ்லாவின் விற்பனை இந்தியாவில் எப்படி இருக்கும் என்பதை கணிப்பது கடினம்” என்கிறார் ஆட்டோ மொபைல் வல்லுநர் முரளிதரன்.

tesla car
tesla carpt desk

அனைத்து சொகுசு வசதிகளுடன் இந்தியாவில் மின்சார வாகனம் தயாரிக்க கார் ஒன்றுக்கு 20 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்படுகிறது. இந்திய மக்களின் பொருளாதார நிலை மற்றும் வாங்கும் திறனுக்கு ஏற்ப மின்சார வாகனங்களை டெஸ்லா தாயரிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com