நவம்பரில் டாப் 'கியரில்' வாகன விற்பனை - சியாம் தகவல்

பண்டிகைக் காலங்களை முன்னிட்டு நவம்பரில் தனி நபர் வாகனங்கள் விற்பனை இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளதாக வாகன உற்பத்தியாளர் சங்கமான சியாம் தெரிவித்துள்ளது.

நவம்பர் மாதத்தில் உற்பத்தி நிறுவனங்களில் இருந்து 3,34,130 வாகனங்கள் டீலர்களுக்கு அனுப்பட்டுள்ளது. இது ஆண்டு அடிப்படையில் 4 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளதாக சியாம் கூறியுள்ளது. இருசக்கர வாகனங்கள் விற்பனை 31 சதவிகிதம் வளர்ச்சி கண்டு 16,23,399ஆக அதிகரித்துள்ளது. மூன்று சக்கர வாகனங்கள் விற்பனையும் 31 சதவிகிதம் வளர்ச்சி கண்டு 59,738ஆக அதிகரித்துள்ளதாக சியாம் கூறியுள்ளது.

cars
carspt desk

பண்டிகைக் காலங்களை முன்னிட்டு நவம்பர் மாதம் முதல் பாதி வரை அனைத்து வகை வாகனங்கள் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டதாக சியாம் அமைப்பு தெரிவித்துள்ளது.

vehicles
“நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் செல்கிறது” - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் இருப்பதும் வாகன விற்பனை அதிகரித்ததற்கு காரணம் என்றும் 2024ஆம் ஆண்டிலும் இது தொடரும் எனவும் வாகன உற்பத்தியாளர் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com