TATA EV | மின்வாகனப் புரட்சியில் முன்னோடியாக மின்னும் இந்திய நிறுவனம்
TATA.ev, மின்வாகனத் துறையில் முன்னோடியாகவும், இந்தியாவின் மின்வாகனப் புரட்சியில் முன்னிலையிலும் உள்ளது, இது மின்சாரப் போக்குவரத்தில் கட்டுக்கதைகளை அகற்றி, மின்வாகனங்களை ஏற்பதற்கான வேகத்தை அதிகரிக்கவும், இனி வருங்காலத்தில் பெரிய அளவு வாடிக்கையாளர்களின் தேர்வாக மாற்றுவதிலும் முன்னணியில் உள்ளது.
ஈவிக்களைப் (மின்வாகனங்கள்) பற்றிய முக்கியமான கட்டுக்கதைகளில் அவற்றின் வரம்பும் ஒன்றாகும். TATA.ev அதன் நெக்சன்.ஈவி 45, கர்வ்.ஈவி (Nexon.ev 45 & Curvv.ev) ஆகிய தயாரிப்புகளைக் கொண்டு இந்த அக்கறையை நிவர்த்தி செய்கிறது, இது ஏஆர்ஏஐ சான்றிதழ் வழங்கப்பட்ட 489 – 502 கிமீ (P1+P2) & C75* வரம்பை 350-425 கிமீ. வரை அளிக்கிறது. இந்த இரண்டு மாடல்களும் வேகமாக சார்ஜ் ஆவதை ஆதரிக்கின்றன, 40 நிமிடங்களில் 10-80% வரை சார்ஜ் ஆகும். பிரமிக்கும் வகையில், கர்வ்.ஈவி 70kW+ சார்ஜரைப் பயன்படுத்தி 150 கிமீ தூரத்தை 15 நிமிடங்களில் சார்ஜ் செய்கிறது. இந்நிறுவனம் வாடிக்கையாளர் நடத்தையிலும் ஒரு மாற்றத்தைக் காண்கிறது – அதாவது 2024-இல் 47% பயனர்கள் தினமும் 75 கிமீக்கு மேல் ஓட்டினர், அதற்கு முன் 2020-இல், இதற்கு மாறாக 13% பயனர்கள் ஓட்டினர். இது மின்வாகனங்கள் நகரத்திற்குள் மட்டுமே பயணம் செய்யமுடியும் என்ற கருத்தை பொய்யாக்கியது.
எனினும், ICE வாகனங்களை விட மின்வாகனங்களின் விலை மிகவும் அதிகம் என்ற கருத்துக்கு மாறாக, TATA.ev உள்ளுர்மயமாக்கல், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஐசிஇ வாகனங்களுக்கு சமமான விலையில் கர்வ்.ஈவி, நெக்சன்.ஈவி ஆகியவற்றை வழங்கி, வெற்றிகரமாக இந்த இடைவெளியைக் குறைத்துள்ளது. அதுமட்டுமின்றி, அதன் போட்டியாளர்களை ஒப்பிடும்போது இவை அதிக அம்சங்களைக் கொண்டுள்ளது, மேலும், பெரிய அளவில் வாடிக்கையாளர்களுக்கு மின்சாரப் போக்குவரத்தை எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுகிறது. இவற்றின் விலைக்கேற்ற பயன்திறனுடன், இந்த ஈவிக்கள் ஆட்டோமேட்டிக் உடன் வருகின்றன, மேலும் வழக்கமான ஐசி பவர்டிரய்ன்களுடன் ஒப்பிடுகையில், அவற்றின் நகரும் பாகங்கள் குறைவாக இருப்பதால், சத்தமின்றி இருப்பதுடன் சக்திவாய்ந்த டிரைவ்கள், மகிழ்ச்சியளிக்கும் செயல்திறன், குறைவான பராமரிப்புச் செலவுகள் ஆகிய வசதிகளை அளிக்கிறது. வழக்கமான எரிபொருள் வாகனங்களை ஒப்பிடுகையில், ஒரு ஈவி பயன்படுத்தும் வாடிக்கையாளர் ஐந்து ஆண்டுகளில் ₹4.2 இலட்சத்திற்கும் ^^ மேலாக சேமிக்க முடியும், இது மின்சார போக்குவரத்துத் திட்டத்தின் மதிப்புக்கு வலுசேர்க்கிறது.
TATA.ev ஈவி பிரிவில் தொடர்ந்து புதிய பாதுகாப்பு அளவுகோல்களை அமைத்து வருகிறது. பன்ச்.ஈவி, நெக்சன்.ஈவி, கர்வ்.ஈவி (Punch.ev, Nexon.ev, Curvv.ev) ஆகிய அனைத்திற்கும் பிரமிக்கும் வகையில் பிஎன்சிஏபி இலிருந்து 5-ஸ்டார் பாதுகாப்பு தரமதிப்பீட்டைப் பெற்றுள்ளன. இந்த வாகனங்கள் டிரைவர், பயணிகள் ஆகியோரின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், ஆறு ஏர்பேக்குகள், ஐபி67-தரமதிப்பு அளிக்கப்பட்ட நீர்ப்புகாத, தூசிப்புகாத மோட்டார்கள், மேம்பட்ட நிலை -2 ஏடிஏஎஸ் தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஈடுபாடு கொண்ட சமூகங்களை ஊக்கப்படுத்தவும், Tata EVs வாங்குவதற்கும் அவற்றை சர்வீஸ் செய்வதற்கும் ஒரே இடத்தில் அனைத்து வசதிகளையும் வழங்குவதற்காக, இந்நிறுவனம் இந்தியா முழுவதும் ஆறு ஈவி-பிரத்தியேக ஸ்டோர்களையும், மூன்று பிரத்தியேக சர்வீஸ் மையங்களையும் தொடங்கியுள்ளது.
TATA.ev அனைவருக்கும் கிடைப்பதற்கான அணுகலை அதிகரித்தல், ஈவி வாகனங்களை ஏற்றுக்கொள்ளும் தடைகளை உடைத்தல், பொதுவான கட்டுக்கதைகளை அகற்றுதல் ஆகியவற்றின் மூலம், வாடிக்கையாளர் சுயவிவரம் விரைவாக ஏற்றுக்கொள்ளவதில் இருந்து விரைவாக பெரும்பாலானோர் ஈவிக்களை பிரதான போக்குவரத்தாக ஏற்றுக்கொள்வதற்கு உறுதிகொண்டுள்ளது.