BYD Yangwang U9
BYD Yangwang U9WEB

குழிகளைத் தாண்டும் சூப்பர் கார்... 6 மீட்டர் அகலத்தை தாண்டக்கூடிய சூப்பர் கார் அறிமுகம்

CES 2025-ல் வெளியிடப்பட்ட BYD-ன் யாங்வாங் U9 சூப்பர் கார், அதன் "ஜம்பிங் சஸ்பென்ஷன்" அமைப்புடன் புதுமையான தொழில்நுட்பத்தைக் அறிமுகப்படுத்தியுள்ளது.
Published on

உலகின் மிகப்பெரிய மின்சார வாகன (EV) உற்பத்தியாளரான BYD Auto நிறுவனம், அதன் முதல் எலக்ட்ரிக் சூப்பர் காரான Yangwang U9 -ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. U9, அதன் Disus X சஸ்பென்ஷன் அமைப்பின் உதவியுடன், தண்ணீர் நிறைந்த பள்ளங்களில் குதித்து, சிரமமின்றி சாலையின் வளைவுகளில் மணிக்கு 120 கிமீ வேகத்தில் சீறிப்பாயும் சோதனை ஓட்டத்தை மேற்கொண்டது.

இந்த 'DiSus Interlligent Body Control System' (Disus X) சஸ்பென்ஷன் செட்டப்பானது ADAS பாதுகாப்பு அம்சங்களுடன் இணைந்து பாதையில் உள்ள தடங்கல்களுக்கு ஏற்றவாறு செயல்படும்.

BYD Yangwang U9
BYD Yangwang U9WEB

அதன் திறனைக் காட்டுவதற்காகவே அந்நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், கார் செல்லும் பாதையில் குழிகள் மற்றும் கூர்மையான பொருட்கள் போன்ற தடங்கல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்தத் தடங்கல்களை U9 கார் லாவகமாக தாண்டிக் செல்லும் காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.

இந்த கார் ஆட்டோபைலட் மோடில் மணிக்கு 120 கிமீ வேகத்தில் இயக்கப்பட்டுள்ளது, தடங்கல்கள் வரும் போது, ADAS அம்சங்களின் உதவியுடன் அதனைக் அறிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் சஸ்பென்ஷன் செட்டப்பைப் பயன்படுத்தி தாவுகிறது.

ரூ. 2 கோடி மதிப்புள்ள இந்த கார் சுமார் 2.36 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை அடையும். இந்த கார் 12-சிலிண்டர் எஞ்சின் மூலம் 1,287 hp வழங்கும் நான்கு மின்சார மோட்டார்களைக் கொண்டுள்ளது. அந்த நான்கு எலக்ட்ரிக் மோட்டார்கள் ஒவ்வொன்றும் அதிகபட்சமாக 240 kW பவரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை, அதாவது பவர்டிரெய்ன் மூலம் 960 kW பீக் பவரை வழங்கும்.

இரண்டு இருக்கைகள் கொண்ட இந்த கார் 80 kWh பேட்டரியில் 465 கிலோமீட்டர் ரேஞ்சை வழங்குகிறது. சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், BYD Yangwang U9, இத்தாலிய உற்பத்தியாளர்களான Ferrari மற்றும் Lamborghini -யின் சில பிரீமியம் சலுகைகளுக்கு கடுமையான போட்டியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BYD Yangwang U9
BYD Yangwang U9WEB

இந்த கார் முழு மின்சார வாகனமாக இருந்தாலும், மணிக்கு 309.19 கிமீ வேகத்தில் செல்லும் திறனை கொண்டது, அதுமட்டுமின்றி பேட்டரியை வெறும் பத்து நிமிடங்களில் 30 சதவீதத்திலிருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்துகொள்ள முடியும். BYD ஆட்டோ இந்த காரை உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு உள்ளூர் சந்தையில் முதலில் கிடைக்கச் செய்யும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com