இந்தியாவில் அறிமுகமாகும் BYD Sealion 7 SUV
BYD Sealion 7 கடந்த ஆண்டு வெளியிடப்பட்டு, சீனா மற்றும் சில ஐரோப்பிய சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் BYD இந்தியா நிறுவனம் தனது Sealion 7 எலக்ட்ரிக் எஸ்யூவியை இம்மாத இறுதியில் நடைபெறவிருக்கும் AutoExpo2025-ல் இந்தியாவில் காட்சிப்படுத்தி, மார்ச் மாதத்திற்குள் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் ஐந்தாவது மின்சார காராகும்.
BYD இந்தியா நிறுவனம், AutoExpo2025-ல் Sealion 7 காருடன், Seal Sedan, Atto 3 SUV மற்றும் BYD eMax 7 MPV ஆகிய மின்சார கார்களை காட்சிப்படுத்தவுள்ளது. இதில் இந்தியாவில் Sealion 7 கார் காட்சிப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த BYD நிறுவனம் இந்தியாவில் RWD மற்றும் AWD ஆகிய இரண்டு வேரியன்ட்களை கொண்ட Euro-spec Sealion 7 வெர்ஸன் காரை AutoExpo2025-ல் காட்சிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச-ஸ்பெக் மாடல் 4,830 மிமீ நீளம், 1,620 மிமீ உயரம் மற்றும் 1,925 மிமீ அகலம் கொண்டது. சீலியன் 7 இன் நீளம் BYD சீலை விட 30 மிமீ நீளமாக உள்ளது, அதே சமயம் வீல்பேஸ் எலக்ட்ரிக் செடானை விட 10 மிமீ அதிகமாக உள்ளது. இந்த எலக்ட்ரிக் SUV ஆனது 19-இன்ச் மற்றும் 20-இன்ச் அலாய் வீல்களை வழங்குகிறது.
சீலியன் 7 காரானது 0 to 100 கிமீ வேகத்தை வெறும் 4.5 வினாடிகளில் எட்டும் எனவும், மணிக்கு 215 கிமீ வேகத்தில் செல்லும் எனவும் BYD அறிவித்துள்ளது. இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி 523 பிஎச்பி பவரையும், 690 என்எம் டார்க்கையும் கொண்டு 23,000 ஆர்பிஎம் வேகத்தில் இயங்குமாம், இது உலகின் அதிவேக எலக்ட்ரிக் மோட்டார் கொண்ட கார் ஆகும்.
BYD சீலியன் 7: ரேஞ்ச் மற்றும் பேட்டரி
சீலியன் 7 எலக்ட்ரிக் SUV ஆனது BYD-யின் புகழ்பெற்ற பிளேட் பேட்டரி தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. RWD, AWD ஆகிய இரண்டு வேரியன்ட்களும் 82.5 kWh பேட்டரி பேக்கைப் பெறுகிறது. சிங்கிள்-மோட்டார் RWD வெர்ஸன் ஒரே சார்ஜில் 482 கிமீ ரேஞ்ஜை வழங்குகிறது, அதே நேரத்தில் டூயல்-மோட்டார் AWD வெர்ஸன் WLTP சைக்கிள் படி 456 கிமீ ரேஞ்ஜை வழங்குகிறது.
AWD அம்சத்துடன் கூடிய Top-of-the-Range Excellence வேரியன்ட், ஒரு முறை சார்ஜ் செய்தால் 502 கிமீ வரை செல்லும் வகையில் 91.3 kWh பேட்டரி பேக்கைப் பெறுகிறது. இந்த பேட்டரிகள் DC FAST சார்ஜர்களுக்கு ஏற்றவாறும் 230 kW பவருக்கு ஏற்றவாறும் அமைந்துள்ளது. வேகமான சார்ஜரைப் பயன்படுத்தி 24 நிமிடங்களில் 10 சதவீதத்திலிருந்து 80 சதவீதம் வரை டாப்-ஸ்பெக் வேரியண்ட்களில் ரீசார்ஜ் செய்துக்கொள்ள முடியுமாம்.
BYD Sealion 7: அம்சங்கள்
இந்த எலெக்ட்ரிக் SUV ஆனது டாஷ்போர்டில் 15.6-இன்ச் Rotating Touchscreen Infotainment System கொண்டுள்ளது. மேலும், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங், முன் மற்றும் பின் பயணிகளுக்கு USB போர்ட்கள், 12-ஸ்பீக்கர் கொண்ட ஆடியோ சிஸ்டம் மற்றும் Vehicle-to-Load (V2L) தொழில்நுட்பத்தையும் பெறுகிறது.
பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, 9 ஏர்பேக்குகள், ஹெட்-அப் டிஸ்ப்ளே (HuD), முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், 360 டிகிரி கேமரா என பல அம்சங்களை வழங்குகிறது. Adaptive Cruise Control, Traffic Jam Assist, Forward and Rear-Collision Warning, Front and Rear Cross-Traffic Alert and Cross-Traffic Braking, Lane Departure Warning, Intelligent High-Beam Light Control, Blind-Spot Detection, Automatic Emergency Braking, Driver Fatigue Management, Door-Opening Warning, Lane Centring Control and Driver-Distraction Warning போன்ற மேம்பட்ட அம்சங்களை வழங்க ரேடார் அடிப்படையிலான சென்சார்களைப் EV பயன்படுத்துகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.