Electronic Vehiclept desk
மோட்டார்
“இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்கள்தான் உலகிலேயே சிறந்தவை” - Ather எனர்ஜி நிறுவனம்
இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்கள்தான் உலகிலேயே சிறந்தது என ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கூறியுள்ளது.
ஏத்தர் நிறுவனத்தின் புதிய வாகனம் அறிமுக நிகழ்ச்சி நாக்பூரில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பேசிய ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்வப்னில் ஜெயின், “உலகில் எந்த நாடுகளிலும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களின் வடிவமைப்பும் தொழில் நுட்பமும் சிறப்பாக இருக்கிறது” என தெரிவித்தார்.
Electronic Vehiclept desk
மேலும் மின்சார வாகனங்களுக்கான மானியம் குறைக்கப்பட்டாலும், மேட் இன் இந்தியா திட்டத்தை தொடங்கியதற்கு அவர் இந்திய அரசிற்கு நன்றி தெரிவித்தார்.
750 விஞ்ஞானிகளின் 18வருட கனவு.. விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
மின்சார வாகனங்களுக்கான தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்பத்தை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு உற்பத்தியாளர்களுக்கு கிடைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.