ஜீன்ஸ் அணிந்தால் உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுமா?
ஜீன்ஸ் அணிந்தால் உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுமா? FB

ஜீன்ஸ் அணிந்தால் உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுமா... எச்சரிக்கும் மருத்துவர்கள்?

ஜீன்ஸ் அணிவதால் சில உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஜீன்ஸ் இறுக்கமாகதான் இருக்கும். அதனால் உடலில் இரத்த ஓட்டம் குறைவது, நரம்பியல் பாதிப்புகள், பூஞ்சை தொற்று, செரிமானப் பிரச்னைகள், மற்றும் இனப்பெருக்க உறுப்புகளில் பாதிப்பு போன்றவை ஏற்படலாம்.
Published on

பொதுவாகவே ஆடைகளை இறுக்கமாக அணியக்கூடாது.. அதிலும் ஜீன்ஸ் ரொம்பவே இருக்கமாக இருக்கும்.. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருமே அதைதான் அதிக நேரம் அணிந்துக் கொண்டு இருக்கின்றனர்.. இது நோய்த்தொற்றுகள், முதுகு வலி மற்றும் தசை பலவீனத்தை ஏற்படுத்தும். முக்கியமாக பெண்களுக்கு, யோனி ஆரோக்கியத்தை சீர்குலைக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.. அத்துடன் அவர்களின் கருப்பை தொற்று ஏற்பட்டு அபாயங்களை உருவாக்கலாம்..

இன்றைய ஃபேஷன் உலகில், ஆரோக்கியமாக இருப்பது சவாலாக இருக்கிறது.. குறிப்பாக பெண்கள் மற்றும் ஆண்களின் ஆடைகளைப் பொறுத்தவரை, சமீபகாலமாக சரியில்லாமால் போகிறது என்றே சொல்லலாம்.. ஆண்கள் அதிகமாக ஜூன்ஸ் அணிய ஆரம்பித்துள்ளனர்.. அவர்களுக்கு போட்டியாக பெண்களும் ஃபேஷன் என்ற பெயரில் ஜூன்ஸ் அணிகின்றனர்.. குறிப்பாக பெண்கள் மத்தியில், அலுவலகம், கல்லூரி அல்லது ஒரு சும்மா வெளியே செல்வதாக இருந்தாலும் கூட இறுக்கமான ஜீன்ஸ் பேண்டைதான் அணிந்து செல்லுகின்றனர்..

ஜீன்ஸ் அணிந்தால் உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுமா?
150 ஆண்டு பழமையான லெவிஸ் பேண்ட்டா இது? - ஜீன்ஸ் பேண்ட்டின் வரலாறும் சுவாரஸ்யமும்!

இப்படி அதிக இறுக்கமான ஜீன்ஸைத் தேர்ந்தெடுப்பது அவர்களின் ஆரோக்கியத்தில் பலவிதமான விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் அவர்களின் உடலில் ஏற்படும் சில மாற்றங்களுக்கும் ஆரோக்கியமின்மைக்கும் இந்த ஜூன்ஸ்தான் காரணம் என்று அவர்கள் நினைத்துக்கூடா பார்த்திருக்க மாட்டார்கள்.. இது குறித்து டெல்லியை சேர்ந்த மருத்துவர் புவனா அஹுஜா மற்றும் நொய்டாவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் டாக்டர் மீரா பதக் என்ன கூறுகிறார்கள்?

jeans
jeansFB
ஜீன்ஸ் அணிந்தால் உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுமா?
ஜீன்ஸ் போடக் கூடாது என்ற கணவருக்கு கத்திக்குத்து? - மருமகள் மீது மாமியார் பரபரப்பு புகார்!

ஆண்கள் மற்றும் பெண்கள் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகள் என்னென்ன?

1. இறுக்கமான ஜீன்ஸ் நரம்புகளை சுருக்குவது மட்டுமல்லாமல், வீக்கம் மற்றும் தடிப்புகள் போன்ற தோல் தொற்றுநோய்களுக்கும் வழிவகுக்கும். நீண்ட நேரம் அவற்றை அணிவது தொடைகளில் இரத்த ஓட்டத்தை பாதிக்கலாம் மற்றும் தோல் எரிச்சலை ஏற்படுத்தும்.

2. ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் வயிற்று பகுதியில் அசௌகரியத்தை ஏற்படுத்தும். மேலும் அடிவயிற்றில் அழுத்தத்தை ஏற்படுத்தி வலியை உண்டாக்கும்.. இரத்த ஓட்டத்தைக் குறைத்து இடுப்பு மூட்டுகளை பாதிக்கும்.. இதுபோன்ற சிக்கல்களைத் தடுக்க அதிக இறுக்கமான ஜீன்ஸைத் தவிர்ப்பது அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்..

jeans
jeansFB

3. பொதுவாக இந்த மாதிரியான ஆடைகள், பருத்தி உடைகளை போல வியர்வையை உறிந்து கொள்வதில்லை. ஆகவே அதிகப்படியான வியர்வை தொடை இடுக்குகளில், அந்தரங்க பகுதியில், கால்களில் என அப்படியே இருந்து பிசுபிசுக்கத் தொடங்கிவிடும். இதனால் பூஞ்சை தொற்று வர வாய்ப்புள்ளது. இதனால் ஒருவரின் குழந்தை பெற்றுக்கொள்வதிக் கூட பாதிப்பு ஏற்படலாம். ஏனெனில் அதிகப்படியான வெப்பம் விந்துக்களின் தரத்தை பாதிக்க வாய்ப்புள்ளது.

4. அத்துடன் இந்த ஜீன்ஸை அணிந்து கொண்டு தூங்கினால் உடலுக்கு காற்று அதிகம் கிடைக்காது. ஏற்கனவே படிந்த வியர்வையால் தோலில் அரிப்பு ஏற்படலாம். இதனை சொறிவதால் அண்டஹ் இடத்தில் புண்கள் ஏற்படலாம். அதிலும் அதிகமான வியர்வை வெளியேறும் தோல் அமைப்பு உடையவர்கள் கூடுதல் இந்த ஜூஸை அணியவேக்கூடாது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்..

Jeans
Jeans
ஜீன்ஸ் அணிந்தால் உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுமா?
கிழிந்த ஜீன்ஸ் சர்ச்சை: உத்தராகண்ட் முதல்வருக்கு போட்டோவில் எதிர்ப்பை பதிவுசெய்த இயக்குநர்

5. இந்த இறுக்கமான ஜீன்ஸ் உடுத்தி உறங்கினால் வயிற்று வலி ஏற்படுவதுடன், செரிமான பிரச்சனைகளும் வாயுத் தொல்லையும் ஏற்படுமாம். அதனால் இரவில் பருத்தி ஆடைகள் அல்லது தளர்வான மற்ற ஆடைகளை அணியுங்கள். இறுக்கமான ஜீன்ஸ் வேண்டாம். நல்ல தூக்கம் வரும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

இது மாதிரி இறுக்கமான ஆடையை நீண்ட நேரம் அணியாமல் இருப்பதே தோலுக்கும் நம் உடலுக்கும் நாம் செய்யும் நன்மையாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com