கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை
கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை முகநூல்

தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளாக காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள்! முழுவிபரம்

தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளாக காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு கடந்த மாதம் வெளியிட்டது.
Published on

தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளாக காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு கடந்த மாதம் வெளியிட்டது. இந்நிலையில், இதற்கான அறிவிப்பு மாவட்ட வாரியாக வெளியாகியுள்ளது. அதன்படி, விண்ணப்பங்கள் பெறப்பட தொடங்கப்பட உள்ளது.

காலிப்பணியிடங்கள்

தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளாக காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு கடந்த மாதம் வெளியிட்டது.

இந்நிலையில், இதற்கான அறிவிப்பு மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. எப்படி அதில் விண்ணப்பிக்கலாம். அதற்கான கல்வி மற்றும் மற்ற தகுதிகள் என்னென்ன என்பது குறித்த விவரங்களை காணலாம்.

கல்வித் தகுதி:

10 ஆம் வகுப்பு தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும்.

கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை
வழிபாட்டுத் தீண்டாமையை ஒழிக்க வேண்டும்; குற்றஞ்சாட்டிய செல்வப்பெருந்தகை... ரவிக்குமார் போட்ட பதிவு!

வயது நிர்ணயம்

21 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரங்கள்:

ரூ.11,100- 35,100-வரை

தேர்வு முறை :

எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபாப்பு முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க தகுதிகள் என்னென்ன?

கிராம உதவியாளர் பணிக்கு 10-ம் வகுப்பு தகுதி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், 10-ம் வகுப்பில் கட்டாயம் தமிழ் பாடத்தைக் கொண்டு படித்திருக்க வேண்டும்.

தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

கூடுதலா சைக்கிள்/ இரு சக்கர வாகனம் இயக்க தெரிந்திருப்பது சிறப்பாகும்.

எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?

இப்பணிடங்களுக்கு விண்ணப்பதார்களுக்கு திறனறிவு தேர்வு, நேர்காணல் ஆகியவை நடத்தப்படும். முதலில் விண்ணப்பதார்களுக்கு எழுதப் படிக்கும் திறனறிவு தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும். அனைவரும் கட்டாயம் 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தேர்வர்கள் அப்பகுதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் சம்மந்தப்பட்ட தாலுகாவில் இருக்க வேண்டும். உங்கள் பகுதியிலேயே அரசு வேலை எதிர்பார்ப்பவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 5.8.2025

தேர்வு நடைபெறும் நாள்: 5.9.2025

கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை
’அப்பாவி ரிதன்யா.. திருப்பூரே அஞ்சலி செலுத்திய நிகழ்வு..’

செப்டம்பர் 2 -ம் தேதி தேர்வு

தமிழ்நாடு முழுவதும் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 4 வரை பெறப்பட்டு, 12-ம் தேதிக்குள் பரிசீலிக்கப்பட உள்ளது. அதனைத்தொடர்ந்து, தகுதியுள்ளவர்களுக்கு செப்டம்பர் 2-ம் தேதி தேர்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விண்ணப்பதார்களுக்கு படித்தல், எழுதுதல் திறன் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில் தேர்வாகும் நபர்களுக்கு செப்டம்பர் 17 முதல் 23 வரை நேர்காணல் நடத்தப்பட உள்ளது.

செப்டம்பர் 25-ம் தேதி நியமனம்

இறுதியாக தேர்வு செய்யப்பட்டவர்களில் இறுதி பட்டியல் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டு, பணி நியமன ஆணை செப்டம்பர் 25-ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com