வங்கியில் பணி வாய்ப்பை எதிர்பார்க்கிறீர்களா? முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது எஸ்பிஐ!
SBI PO காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் உடனே ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. யார் யார் விண்ணப்பிக்கலாம்? இதுகுறித்த தகவலை பார்க்கலாம்.
பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள ப்ரொபஷனரி அதிகாரிகளுக்காக தேசிய அளவில் மொத்தம் 541 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், எஸ்சி பிரிவில் - 80 பணியிடங்கள், எஸ்டி பிரிவில் - 73, ஒபிசி - 135 இடங்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் - 50, பொதுப் பிரிவில் - 203 என நிரப்பப்படுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி
எஸ்பிஐ வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 30.09.2025 தேதியின்படி, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இறுதி ஆண்டு கல்லூரி படிப்பில் இருப்பவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி சான்றிதழ்கள் 30.09.2025 தேதியின் அடிப்படையில் கணக்கிடப்படும்.
குறிப்பாக, கடந்த 2020ஆம் ஆண்டு எஸ்பிஐ-யில் துணை மேலாளர் பணிக்கு 2,000 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், 5 ஆண்டுகளில் அதன் எண்ணிக்கை 4 மடங்கு குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பித்தல் மற்றும் தேர்வு முறை:
விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://sbi.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதார்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.
முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மைத் தேர்விற்கு தகுதி அடைவார்கள். இத்தேர்வு 250 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் கட்-ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்கள், நேர்முகத் தேர்விற்கு தகுதி அடைவார்கள். நேர்முகத் தேர்வு சைக்கோமெட்ரிக் சோதனை, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்காணல் என நடத்தப்படும்.
விண்ணப்ப தேதி
இதற்கான விண்ணப்பம் ஜூன் 24 தேதி முதல் தொடங்கிய நிலையில், ஜூலை 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரம்
Probationary Officers பணிக்குத் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப அடிப்படை ஊதியமாக ரூ.48,480 வழங்கப்படும் என்றும், இது ஆரம்ப ஊதியம் மட்டுமே என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொடுப்பனை, அகவிலைப்படி, பென்ஷன் ஆகிய சலுகை உண்