NIACL நிறுவனத்தில் 500 பணியிடங்கள்... விண்ணப்பிப்பது எப்படி?
NIACL என்பது மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் காப்பீட்டு நிறுவனம் (The New India Assurance Company Limited) ஆகும். இது உலகம் முழுக்க பல்வேறு இடங்களில் சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது, இந்த நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 500 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், கல்வித் தகுதி என்ன என்பன போன்ற விவரங்களை கீழே காணலாம்.
மொத்தம் காலியிடங்கள்: மொத்தம் 500 பணியிடங்கள் ஆகும்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருந்தால் விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு: 21 வயது நிரம்பியவர்களும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. ஓபிசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுகளும், எஸ்சி / எஸ்டி பிரிவினர் என்றால் 5 ஆண்டுகள் வரையும் தளர்வுகள் அளிக்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பிக்கும் இணையதளம்: www.newindia.co.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை: ஆன்லைன் வழியாக தேர்வு நடைபெறும். உள்ளூர் மொழி கண்டிப்பாக தெரிந்து இருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: விண்ணப்ப கட்டணத்தை பொறுத்தவரை பொது பிரிவினர் என்றால் ரூ.944 கட்டணம் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி எஸ்டி பிரிவினர் என்றால், 708 கட்டணமும், மாற்றுத்திறனாளிகள் எனில் ரூ.472 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி: விண்ணப்பிக்க கால அவகாசம் தொடங்கிய நாள் 06.06.2025 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள் 26.06.2025 ஆகும்.
குறிப்பு: இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஒரு ஆண்டுக்கு மட்டுமே பணி செய்ய முடியும். தேர்வுக்கு விண்ணப்பிக்கு முன்பாக தேர்வு அறிவிப்பினை நன்கு படித்து தெரிந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.