\
black coffee & green tea
black coffee & green tea AI

Black Coffee Vs Green Tea | சர்க்கரை நோய், எடைக்குறைப்புக்கு எது சிறந்தது?

எடைக்குறைப்பு, சர்க்கரை கட்டுப்பாட்டுக்கு பிளாக் காபி–கிரீன் டீ இரண்டும் உதவினாலும், Caffine , EGCG, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற சேர்மங்கள் எப்படி வேறுபடுகின்றன என்பது குறித்து இதில் காணலாம்.
Published on: 

செய்தியாளர் - M. மீரா

எடை குறைக்கவும், சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் பலரும் பிளாக் காபி மற்றும் கிரீன் டீயை தங்களது தினசரி உணவுப் பழக்கத்தில் சேர்த்துக் கொள்கின்றனர். இரண்டுமே சர்க்கரை, பால் உள்ளிட்டவைச் சேர்க்காமல் அருந்தும்போது குறைந்த கலோரிகளைக் கொண்ட பானங்களாகும்.

பிளாக் காபியின் நன்மைகள்

பிளாக் காபியில் உள்ள caffine உடலின் விழிப்புணர்வையும் கவனத்தையும் அதிகரிக்க உதவுகிறது. மேலும், caffine வளர்சிதை மாற்ற விகிதத்தை ஓரளவு அதிகரிப்பதால், உடல் அதிக கலோரிகளை எரிக்க உதவக்கூடும். உடற்பயிற்சிக்கு முன் காபி அருந்துவது உடல் செயல்திறனை மேம்படுத்தும்.

black coffee
black coffee AI

காபியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. வழக்கமான காபி அருந்துதல் டைப்-2 சர்க்கரை நோய் உள்ளிட்ட சில நோய்களின் அபாயம் குறைவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கிரீன் டீயின் நன்மைகள்

கிரீன் டீயில் catechins எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. குறிப்பாக, EGCG எனப்படும் சேர்மம் கொழுப்பு ஆக்ஸிடேஷனை ஊக்குவிக்கவும், எடை மேலாண்மைக்கு உதவவும் வாய்ப்புள்ளது.

இதில் உள்ள caffine மற்றும் L-theanine ஆகியவை இணைந்து கவனம் மற்றும் மன விழிப்புணர்வை மேம்படுத்த உதவலாம். மேலும், சில ஆய்வுகள் கிரீன் டீ இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்க உதவக்கூடும் எனக் கூறுகின்றன.

green tea
green teaANI

எது சிறந்தது?

எடை குறைப்புக்கு, இரண்டுமே சிறிய அளவில் உதவக்கூடியவை. பிளாக் காபி மற்றும் கிரீன் டீ இரண்டுமே வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் எடை குறைப்புக்கு உதவக்கூடும். காபியில் உள்ள caffine பசியை தற்காலிகமாகக் குறைக்கலாம். கிரீன் டீயில் உள்ள EGCG மற்றும் caffine, கொழுப்பைக் குறைக்க உதவலாம். குறிப்பாக, தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவக்கூடும்.

சர்க்கரை, பால் போன்றவை சேர்க்காமல் அருந்தும்போது, பிளாக் காபி மற்றும் கிரீன் டீ இரண்டிலும் கலோரிகள் மிகக் குறைவு. எனவே, அவற்றை சர்க்கரை நோயாளிகளின் உணவுமுறையிலும் சேர்த்துக்கொள்ளலாம். பிளாக் காபி அருந்துவது நீண்ட காலத்தில் டைப்-2 சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் குறையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேபோல், கிரீன் டீ சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது எனவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது.

black coffee & green tea
தமிழகத்தில் முதியோர் மக்கள் தொகை அதிகரிப்பு.. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com