\
540 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியது சொமாட்டோ..!

540 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியது சொமாட்டோ..!

540 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியது சொமாட்டோ..!
Published on

சொமாட்டோ நிறுவனம் தனது வாடிக்கையாளர் சேவை குழுவில் பணிபுரியும் 540 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது. 

உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் சொமாட்டோ. இதன் குருகிராம் நிறுவனத்தில் பணிபுரியும் 540 ஊழியர்கள் பணியிலிருந்து  நீக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சொமாட்டோ நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி சொமாட்டோ நிறுவனத்தின் 10 சதவிகித ஊழியர்களான 540 பேர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் இவர்களுக்கு 2 முதல் 4 மாதங்களுக்கான ஊதிய பணம் வழங்கப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் சொமாட்டோ நிறுவனம் சில தொழில்நுட்பம் சார்ந்த முன்னேற்றங்களை முன்னெடுத்தது. இதன்காரணமாக வாடிக்கையாளர் சேவையில் ஈடுபட்டு வரும் ஊழியர்களின் பணி குறைக்கப்பட்டது. ஆகவே இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை நீக்க சொமாட்டோ நிறுவனம் முடிவு எடுத்தது. ஏற்கெனவே கடந்த மாதம் 60 ஊழியர்களை சொமாட்டோ நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com