சொமாட்டோ
சொமாட்டோweb

எரிபொருள் தட்டுப்பாடு|பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்திய Zomato!

ஈரான் போரால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் உணவு டெலிவரி நிறுவனமான சொமாட்டோ பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
Published on
Summary

ஈரான்-அமெரிக்கா போரின் விளைவாக உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கத்தாரில் உள்ள Ras Laffan எரிசக்தி மையம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால், உற்பத்தி பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகள் எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றன. இந்த சூழலில் Zomato தனது பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு இடையேயான போர் முடிவுக்கு வந்துவிடும், உலகநாடுகளின் எரிபொருள் பற்றாக்குறை விரைவில் சரிசெய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் 3 வாரங்களை கடந்து நடந்துவரும் இப்போர் மேலும் தீவிரமடைந்துவருகிறது. ஈரான் தொடர்ந்து வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதும், எரிசக்தி மையங்களை குறிவைத்து தகர்த்துவதும் உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.

கத்தார் எரிசக்தி மையம் மீது தாக்குதல்
கத்தார் எரிசக்தி மையம் மீது தாக்குதல்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிசக்தி மையத்தை (Ras Laffan) ஈரான் தாக்கிய நிலையில், உற்பத்தி பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலால் கத்தாரின் ஒட்டுமொத்த எல்.என்.ஜி உற்பத்தித் திறனில் 17 விழுக்காடு முற்றிலுமாக அழிந்துள்ளதாக கூறப்படுகிறது. சேதமடைந்த கட்டமைப்புகளைச் சீரமைக்க 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா தனது எரிவாயு தேவையில் 50 சதவீதம் கத்தாரிலிருந்தே இறக்குமதி செய்வதால் எரிபொருள் கிடைப்பதில் பெரிய தாக்கத்தை இந்தியா எதிர்கொண்டுள்ளது.

கச்சா எண்ணெய் - எல்பிஜி சிலிண்டர்
கச்சா எண்ணெய் - எல்பிஜி சிலிண்டர்web

இந்தசூழலில் தான் உணவு டெலிவரி நிறுவனமான சொமாட்டோ தங்களுடைய பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

சொமாட்டோ
’பெரிய ஆபத்தில் இந்தியா..’ உலகின் மிகப்பெரிய எரிசக்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்!

கட்டணத்தை உயர்த்திய சொமாட்டோ..

ஈரான் போரால் கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல், சமையல் எரிவாயு, வணிக எரிவாயு கிடைப்பதில் சிக்கல்கள் நீடித்துவருகிறது. இந்தசூழலில் தான் உணவு விநியோக நிறுவனமான சொமாட்டோ பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

zomato
zomatoPT

பிரபல உணவு விநியோக தளமான சொமேட்டோ, தனது பிளாட்ஃபார்ம் கட்டணத்தில் 2 ரூபாய் 40 பைசா உயர்த்தியுள்ளது. இதன்மூலம், அதன் பிளாட்ஃபார்ம் கட்டணம், 12 ரூபாய் 50 பைசாவிலிருந்து 14 ரூபாய் 90 பைசாவாக உயர்ந்துள்ளது. இனி வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை உணவு ஆர்டர் செய்யும்போதும், கூடுதலாக 2 ரூபாய் 40 பைசா செலுத்த நேரிடும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில், இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சொமாட்டோ
ஈரான் போர் எதிரொலி| ப்ரீமியம் பெட்ரோல், தொழில்துறை எரிபொருள் விலைகள் உயர்வு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com