‘ப்ரீ சாப்பாடு’கிடைக்க நீங்கள் வேடிக்கையாக செய்த விஷயம் என்ன - சொமேட்டோ நையாண்டி..!

‘ப்ரீ சாப்பாடு’கிடைக்க நீங்கள் வேடிக்கையாக செய்த விஷயம் என்ன - சொமேட்டோ நையாண்டி..!
‘ப்ரீ சாப்பாடு’கிடைக்க நீங்கள் வேடிக்கையாக செய்த விஷயம் என்ன - சொமேட்டோ நையாண்டி..!

இலவசமாக உணவு சாப்பிட வேடிக்கையாக நீங்கள் செய்த விஷயம் என்னவென்று சொமேட்டோ தனது வாடிக்கையாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக திகழ்வது சொமேட்டோ. இது அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கை. இந்நிலையில் தனது வாடிக்கையாளிடம் நகைச்சுவையான கேள்வி ஒன்றை ட்விட்டரில் சொமேட்டோ எழுப்பியுள்ளது.

அதில், ‘இலவசமாக உணவு பெற நீங்கள் வேடிக்கையாக செய்த விஷயம் என்ன?’ என கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பலரும் பலவிதமான பதில்களை கூறியுள்ளனர்.

அவற்றில் சிலரது ஐடியாக்களை காண்போம் :

1. மற்றவர்களை ட்ரீட் வையுங்கள் என வற்புறுத்தியிருக்கிறேன்.

2. குடும்பத்தை அழைத்துக்கொண்டு ஓட்டலுக்கு சென்றிருக்கிறேன்.

3. உணவு தகவல் கொடுப்பவராக, யூடியூஃப் சேனல் நடத்தியிருக்கிறேன்

4. அழைப்பிதழ் இல்லாமலே திருமணத்தில் பங்கேற்றிருக்கிறேன்

5. எனது முன்னாள் காதலியின் திருமணத்தில் கலந்து கொண்டேன்.

6. அலுவலகத்தில் இரவு 10.30 மணிக்குமேல் இருந்து பணியாற்றுவேன். அப்படி செய்யும்போது எனது ஹெச்.ஆர் அனைவருக்கும் உணவு ஆர்டர் செய்வார்.

8. எங்கள் பகுதியில் இருக்கும் ரயில்வே கிராஸிங் எப்போது அடைப்பார்கள். எப்போது ரயில் வரும் என எனக்கு தெரியும். சரியாக அந்த சமயத்தில் பீட்சாஆர்டர் செய்வேன். அப்போது டெலிவரி செய்பவரால் சரியான நேரத்திற்கு டெலிவரி செய்யமுடியாமல் போகும். அதனால் அவர் எனக்கு பீட்சாவை இலவசமாக வழங்குவார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com