\
”அந்தப் பறவை என் கூடவே இருக்க வேண்டும்” - தோனி மகள் சந்தோஷம்

”அந்தப் பறவை என் கூடவே இருக்க வேண்டும்” - தோனி மகள் சந்தோஷம்

”அந்தப் பறவை என் கூடவே இருக்க வேண்டும்” - தோனி மகள் சந்தோஷம்
Published on

நான் அந்தப் பறவையை மீண்டும் பார்ப்பேன் என நம்புவதாக தோனியின் மகள் ஷிவா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தோனியின் மகள் ஷிவா, இன்ஸ்டாவில் அதிகாரப்பூர்வ பக்கத்தை வைத்துள்ளார். இந்தப் பக்கத்தை தோனியும் அவரது மனைவி சாக்‌ஷியும் நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை தன் வீட்டில் நடந்த ஒரு சம்பவத்தை ஷிவா பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவோடு சில புகைப்படங்களையும் ஷிவா பகிர்ந்துள்ளார். அதில் தோனியின் கைகளில் அந்தச் சிறிய பறவை இருக்கிறது.

ஷிவாவின் பதிவில் ''இன்று மாலை எங்கள் வீட்டுப் புல்வெளியில் ஒரு பறவை மயக்கத்தில் கிடப்பதைக் கண்டேன். நான் அம்மா, அப்பா என்று கத்தினேன். என்னுடைய அப்பா, அந்தப் பறவையை தன் கையில் பிடித்து அவளுக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடுத்தார். சிறிது நேரம் கழித்து அது கண்களைத் திறந்தது. நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியானோம்.

நாங்கள் அவளை சில இலைகளின் மேல் அமர வைத்தோம். அது காப்பர்ஸ்மித் (கன்னான் பறவை) எனக் கூறினார். அழகான சிறிய பறவை.பின்னர் திடீரென்று அது பறந்தது. அந்தப் பறவை என்னுடனேயே இருக்க வேண்டுமென நான் விரும்பினேன், ஆனால் அது தன் அம்மாவிடம் சென்றதாக என் அம்மா என்னிடம் சொன்னாள்.அவளை மீண்டும் பார்ப்பேன் என்று நான் நம்புகிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com