நிலம் ஆக்கிரமிப்பு| யூசுப் பதானுக்கு நோட்டீஸ்.. ஆட்டத்தை ஆரம்பித்த குஜராத் அரசு!

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான யூசுப் பதான், நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாக குஜராத் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
யூசுப் பதான்
யூசுப் பதான்எக்ஸ் தளம்

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான யூசுப் பதான், நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாக குஜராத் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான யூசுப் பதான், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டியிட்டார். மேற்கு வங்க மாநிலம் பஹ்ராம்பூர் தொகுதியில் அவர் வெற்றிபெற்றுள்ள நிலையில் புதிய பிரச்னை ஒன்று அவருக்கு ஏற்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில், அம்மாநிலத்தில் உள்ள வதோதரா முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான நிலத்தை, யூசுப் பதான் ஆக்கிரமித்ததாகக் கூறி முனிசிபல் கார்ப்பரேஷன் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 2012-ஆம் ஆண்டில், யூசுப் பதான் வதோதரா முனிசிபல் கார்ப்பரேஷனிடம், ஒரு சதுர மீட்டருக்கு கிட்டத்தட்ட 57,000 ரூபாய் வழங்குவதாக கூறி உள்ளார். ஆயினும், யூசுப் பதானால் அனுப்பப்பட்ட அந்த முன்மொழிவு நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் வதோதரா முனிசிபல் கார்ப்பரேஷன், அதனுடைய நிலத்தைச் சுற்றி வேலி அமைக்கவில்லை. ஆனால், ​​யூசுப் பதான் அந்த இடத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே மாநகராட்சி விசாரணை மேற்கொண்டு வருவதுடன், அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ”தனிப்பெரும்பான்மை கிடைக்காததற்கு பாஜகவின் ஆணவமே காரணம்” - ஆர்.எஸ்.எஸ். சாடல்

யூசுப் பதான்
’தேர்தலிலும் சிக்சர் விளாசல்’ - மேற்குவங்கத்தில் காங்கிரஸ், பாஜக இரண்டையும் காலிசெய்த யூசுப் பதான்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com