மணிக்கு 300 கிமீ வேகத்தில் பயணம்... 25 வயதேயான பிரபல Bike Riding யூடியூபர் சாலை விபத்தில் பலி!

அகஸ்தியா சவுகானின் மரணச் செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
YouTuber Agastya Chauhan
YouTuber Agastya ChauhanFacebook

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

உத்தரகாண்ட் மாநிலம் டெஹ்ராடூனை சேர்ந்தவர் அகஸ்தியா சவுகான் (25). பைக் ரைடிங் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவரான அகஸ்தியா, அதுதொடர்பான வீடியோக்களை தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டு வந்துள்ளார். அதுமூலம் சோஷியல் மீடியாவில் பிரபலமடைந்தார். குறிப்பாக இவருடைய 'PRO RIDER 1000' என்ற யூடியூப் சேனலில் 12 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். இவர் போடும் பைக் ரைடிங் தொடர்பான வீடியோ ஒவ்வொன்றுக்கும் லட்சக்கணக்கான வியூஸ்கள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில் அகஸ்தியா சவுகான் நேற்று ஆக்ராவிலிருந்து டெல்லிக்கு பைக்கில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தபோது அங்குள்ள டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானார். அவர் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் பைக் ஓட்டிச்சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஹெல்மெட் அணிந்திருந்தும் அகஸ்தியா சவுகான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவலறிந்து சென்ற போலீசார் அகஸ்தியா சவுகானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Agastya Chauhan
Agastya Chauhan

பிரேத பரிசோதனைக்கு பின் அவரது குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்தைத் தொடர்ந்து, வாகனங்களில் அதிவேகத்தில் செல்வதோ, சாகசம் செய்யவோ கூடாது என அலிகார் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அகஸ்தியா சவுகானின் மரணச் செய்தியை கேட்டு அவருடைய சப்ஸ்கிரைபர்ஸ் உட்பட பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சியும் சோகமும் அடைந்துள்ளனர்.

மித வேகம், மிக நன்று!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com